ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களில் குணசித்திரம், வில்லன் உள்ளிட்ட கேரக்டரில் கலக்கி வருபவர்களில் சம்பத்ராமுக்கு முக்கிய இடம் உண்டு. கடந்த 25 ஆண்டுகளில் 225 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் தற்போது மலையாளத்தில் 3, தமிழில் 3, தெலுங்கில் 5 படங்களில் இரவு பகலாக படுபிஸியாக நடித்து வருகிறார்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடந்த படப்பிடிப்பு ஒன்றிற்காக வந்த சம்பத்ராம் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள மாநெல்லுார் தான் சொந்த ஊர். 1995ல் நான் படித்து கொண்டிருந்த காலகட்டத்தில் அப்பா மறைந்தார். எனக்கும் குடும்பத்தினரிடம் சிறு மனக்கஷ்டம் ஏற்பட்டது. சொந்த காலில் நிற்கலாம் என சென்னைக்கு குடிபெயர்ந்தேன்.
மேன்ஷனில் தங்கி தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தேன். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தாலும் வழி ஏனோ தெரியவில்லை.
மேன்ஷனில் சினிமாத்துறையில் பணிபுரிந்த பலரும் தங்கியிருந்தனர். அவர்கள் மூலம் சினிமா மீது பிடிப்பு ஏற்பட்டது. 1998ல் முதல்வன் படத்தில் சிறிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. அதில் என் தோற்றத்தை கவனித்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அஜித் நடித்த தீனா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்தார். அது தான் என்னை தமிழ் சினிமாவில் மற்றவர்களுக்கு தெரிய வைத்தது.
பிறகு சரத்குமார் நடித்த அரசு படத்தில் நடித்தேன். அதையடுத்து தவசி, அருள், காஞ்சனா என படுபிஸியாகி தற்போது வெளியான கபாலி, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்துள்ளேன். கபாலியும், விக்ரமும் பெரியளவில் எனக்கு பிரேக் கொடுத்தன.
தற்போது கன்னடத்தில் 2, மலையாளத்தில் 3, தமிழில் 3, தெலுங்கில் 5 படங்களில் நடித்துள்ளேன். விரைவில் திரைக்கு வரவுள்ளன. சமீபத்தில் தெலுங்கில் பக்த கண்ணப்பா என்ற புராண பட ரீமேக்கில் முக்கியமான சண்டலு என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இந்த படத்தை நடிகர் மோகன்பாபு தயாரிக்க அவரது மகன் விஷ்ணு மச்சு நாயகனாக நடிக்கிறார். முழுக்க நியூசிலாந்தில் எடுக்கப்பட்ட இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
மோகன்லால், அக் ஷய்குமார், காஜல்அகர்வால், என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
தங்கலான் படத்தில் கோவணம் கட்டி நடித்ததை மறக்க முடியாது. சாலா, கங்கணம், வருஷநாடு என பல படங்கள் வரவுள்ளன.
கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழர் கென் கந்தையா தயாரிக்கும் 'பெர்ல் இன் த பிளட்' ஆங்கில படத்தில் நாயகனாக நடித்துள்ளேன். இலங்கை போருக்கு முன் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படமும் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.
சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகளாகி விட்டாலும் நல்ல நிலைக்கு வர முடியவில்லையே என்ற ஆதங்கம் ஒரு புறம் இருந்தாலும், இந்தளவுக்காவது வந்திருக்கோமே என எனக்கு நானே ஆறுதல் கூறி கொள்வதும் உண்டு.
சினிமா உலகை பொறுத்தவரையில் முயற்சி செய்கிறோம். அந்த முயற்சிக்கு உடனடி வெற்றி கிடைத்து விடும் என கூற முடியாது. ஒவ்வொரு கட்டமாக கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. இது ஆண்டவன் கொடுத்த வாய்ப்பு. செல்ல வேண்டிய துாரம் இன்னமும் இருக்கிறது என்றார்.
ரசிகர்கள் சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும். படங்களை பார்த்து ஜாலியாக ரசித்து எங்களை போன்றவர்களை ஊக்கப்படுத்தினால் சந்தோஷம். இவ்வாறு அவர் கூறினார்.