''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
2023ம் ஆண்டில் வழக்கம் போல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல படங்கள் வந்தாலும், அவர்களை விட அதிகமான படங்களுக்கு புதிய இசையமைப்பாளர்களும், வளரும் இசையமைப்பாளர்களும் இசையமைத்திருந்தனர். புதியவர்களில் ஒரு சிலர்தான் கவனிக்கப்படும் அளவிற்கான பாடல்களைக் கொடுத்திருந்தனர். இருந்தாலும் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்ததில் முன்னணி இசையமைப்பாளர்களே முந்தியுள்ளனர்.
யு டியூபில் அதிகப் பார்வைகளை எந்தப் பாடல் பெறுகிறது என்பதுதான் கடந்த சில வருடங்களாக ரசிகர்கள் கவனிக்கப்படும் விஷயமாக இருக்கிறது. அந்த விதத்தில் இந்த வருடம் அதிகப் பார்வைகளைப் பெற்ற டாப் 10 பாடல்கள்.
1. பாடல் - ரஞ்சிதமே…
படம் - வாரிசு
இசை - தமன்
எழுதியவர் - விவேக்
பாடியவர்கள் - விஜய், மானசி
யு டியூப் பார்வைகள்
லிரிக் வீடியோ - 224 மில்லியன்
முழு பாடல் வீடியோ - 148 மில்லியன்
மொத்தம் - 372 மில்லியன்
பாடலைக் கேட்கும் போதே ஒரு உற்சாகத்தைத் தரும் தமனின் இசை, விவேக்கின் எளிமையான வரிகள், விஜய், மானசியின் குரல்கள், விஜய், ராஷ்மிகாவின் 'க்யூட், க்யூட்' ஆன நடனம் இந்தப் பாடலை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கி இந்த ஆண்டில் யு டியூபில் அதிகம் ரசிக்கப்பட்ட பாடலாக நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.
https://www.youtube.com/watch?v=unQlCp-lL6I
2. பாடல் - காவாலய்யா…
படம் - ஜெயிலர்
இசை - அனிருத்
எழுதியவர் - அருண்ராஜா காமராஜ்
பாடியவர்கள் - ஷில்பா ராவ், அனிருத்
யு டியூப் பார்வைகள்
லிரிக் வீடியோ - 228 மில்லியன்
முழு பாடல் வீடியோ - 138 மில்லியன்
மொத்தம் - 366 மில்லியன்
ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் அவர் முழுமையாக இடம் பெற்ற பாடல்கள்தான் சூப்பர் ஹிட் ஆகும். ஆனால், இந்தப் பாடல் தமன்னாவின் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட ஒரு பாடல். ஆங்காங்கே ரஜினியை நடக்க விட்டும், நடனமாட விட்டும் சில வினாடிகள் மட்டுமே காட்டினார்கள். தமன்னாவின் கிளாமர் நடனம்தான் பாட்டின் ஹிட்டிற்குக் காரணம் என அனைவருமே ஏற்றுக் கொள்ளவார்கள். முதலிடம் பிடித்த 'லியோ' படத்தின் 'ரஞ்சிதமே' பாடலுக்கும், இந்த 'காவாலய்யா' பாடலுக்கும் அதிரடி நடனம் அமைத்தவர் நடன இயக்குனர் ஜானி.
https://youtu.be/lM8h5Mm6ODo
3. பாடல் - நா ரெடிதான்…
படம் - லியோ
இசை - அனிருத்
எழுதியவர் - விஷ்ணு எடவன்
பாடியவர்கள் - விஜய், அனிருத்
யு டியூப் பார்வைகள்
லிரிக் வீடியோ - 202 மில்லியன்
முழு பாடல் வீடியோ - 37 மில்லியன்
மொத்தம் - 239 மில்லியன்
விஜய் படம் என்றாலே அதில் அவருடைய அறிமுகப் பாடலுக்கென எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். அந்தப் பாடலை எப்படியும் சூப்பர் ஹிட் ஆக்க வேண்டுமென இசையமைப்பாளரும், இயக்குனர்களும் நினைப்பார்கள். இந்தப் பாடலைப் பொறுத்தவரை அதிகம் ரசிக்கப்பட்டாலும் விஜய்யின் முந்தைய அறிமுகப் பாடல்களோடு ஒப்பிடுகையில் வரவேற்பு கொஞ்சம் குறைவுதான் என்பதே உண்மை.
https://www.youtube.com/watch?v=3wDiqlTNlfQ
4. பாடல் - ஜிமிக்கி பொண்ணு…
படம் - வாரிசு
இசை - தமன்
எழுதியவர் - விவேக்
பாடியவர்கள் - அனிருத், ஜோனிதா காந்தி
யு டியூப் பார்வைகள்
முழு பாடல் வீடியோ - 94 மில்லியன் + 39 மில்லியன்
2 நிமிட பாடல் வீடியோ - 39 மில்லியன்
ஆடியோ மட்டும் - 13 மில்லியன்
மொத்தம் - 185 மில்லியன்
2023ம் ஆண்டில் வெளிவந்த படங்களின் பாடல்களில் அதிகப் பார்வைகளைப் பெற்ற படம் என்ற பெருமையை 'வாரிசு' தட்டிச் செல்கிறது. 'ரஞ்சிதமே' பாடலை அடுத்து இந்த 'ஜிமிக்கி பொண்ணு' பாடலிலும் தமன், விஜய், ராஷ்மிகா கூட்டணி ரசிகர்களை வசீகரித்துவிட்டது.
https://www.youtube.com/watch?v=HfMTwkVQohM
5. பாடல் - வா வாத்தி…
படம் - வாத்தி
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
எழுதியவர் - தனுஷ்
பாடியவர் - ஸ்வேதா மோகன்
யு டியூப் பார்வைகள்
லிரிக் வீடியோ - 31 மில்லியன்
முழு பாடல் வீடியோ - 135 மில்லியன்
மொத்தம் - 166 மில்லியன்
அதிரடி, குத்துப் பாடல்களுக்கு மத்தியில் ஒரு அருமையான மெலடி பாடலாக அனைத்து ரசிகர்களைக் கவர்ந்த பாடல். தனுஷின் காதல் வரிகளில், ஸ்வேதா மோகனின் காந்தக் குரலில், ஜிவி பிரகாஷின் இனிய இசையும் ரசிக்க வைத்தது. இம்மாதிரியான பாடல்களே காலம் கடந்தும் நிற்கும்.
https://www.youtube.com/watch?v=592mNGkpYig
6. பாடல் - ஹுக்கும்…
படம் - ஜெயிலர்
இசை - அனிருத்
எழுதியவர் - சூப்பர் சுப்பு
பாடியவர் - அனிருத், குழுவினர்
யு டியூப் பார்வைகள்
லிரிக் வீடியோ - 111 மில்லியன்
முழு பாடல் வீடியோ - 11 மில்லியன்
மொத்தம் - 122 மில்லியன்
'ஜெயிலர்' படத்தின் முதல் சிங்கிளாக வந்த தமன்னாவின் 'காவாலய்யா' பாடல் உடனடியாக சூப்பர் ஹிட் ஆனது. அந்தப் பாடலில் ரஜினிக்கு முக்கியத்துவம் இல்லையே என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தார்கள். அவர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் 'மாஸ்' பாடலாக இந்த 'ஹுக்கும்' பாடல் அமைந்தது. வரிகள் யாரையோ குறிப்பிட்டு நக்கலடிக்கும் விதத்தில் இருந்ததாக பரபரப்பை ஏற்படுத்திய பாடல்.
https://www.youtube.com/watch?v=1F3hm6MfR1k
7. பாடல் - தீ தளபதி…
படம் - வாரிசு
இசை - தமன்
எழுதியவர் - விவேக்
பாடியவர் - சிலம்பரசன்
யு டியூப் பார்வைகள்
சிலம்பரசன் வீடியோ - 114 மில்லியன்
முழு பாடல் வீடியோ - 7 மில்லியன்
மொத்தம் - 121 மில்லியன்
விஜய் படம் வந்தாலே அதில் ஓரிரு பாடல்களை சூப்பர் ஹிட்டாகவும், மற்ற பாடல்களை ஹிட்டாகவும் அமைத்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள். இசையமைப்பாளர் தமன், விஜய் நடிக்கும் ஒரு படத்திற்கு இசையமைக்கக் கிடைத்த வாய்ப்பை இந்தப் படத்தில் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார். விஜய்யின் முழு பாடல் வீடியோவை விட, சிலம்பரசன் பாடி, ஆடி, நடித்த வீடியோ 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.
https://www.youtube.com/watch?v=eqBrHvdGbOY
8. பாடல் - காட்டுமல்லி…
படம் - விடுதலை பார்ட் 1
இசை - இளையராஜா
எழுதியவர் - இளையராஜா
பாடியவர்கள் - இளையராஜா, அனன்யா பட்
யு டியூப் பார்வைகள்
லிரிக் வீடியோ - 30 மில்லியன்
முழு பாடல் வீடியோ - 72 மில்லியன்
மொத்தம் - 102 மில்லியன்
இன்றைய தலைமுறை அதிரடிப் பாடல்களுக்கு ரசிகர்களாக மாறியிருந்தாலும் எப்போதும் ரசிக்கும் பாடல்களாக இளையராஜாவின் இசையில் வந்த பல பாடல்கள் இருக்கின்றன. அவரது இசையில் இந்த வருடம் வந்த சில படங்களில் இந்த 'காட்டுமல்லி' பாடல் அவரது இசைவாசத்தை ரசிகர்களுக்கு மீண்டும் தந்து ரசிக்க வைத்தது.
https://www.youtube.com/watch?v=MAa_8XwAVlA
9. பாடல் - சில்லா..சில்லா..
படம் - துணிவு
இசை - ஜிப்ரான்
எழுதியவர் - வைசாக்
பாடியவர்கள் - அனிருத், வைசாக், ஜிப்ரான்
யு டியூப் பார்வைகள்
லிரிக் வீடியோ - 60 மில்லியன்
முழு பாடல் வீடியோ - 31 மில்லியன்
அஜித் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த ஒரே படமான 'துணிவு' படம் முழு ஆக்ஷன் படமாக அமைந்ததால் பாடல்களுக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. படத்தில் இடம் பெற்ற மூன்றே பாடல்களில் இந்த ஒரு பாடல் மட்டும் அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ளது.
https://www.youtube.com/watch?v=I7dRB7mTtLE
10.பாடல் - படாஸ்…
படம் - லியோ
இசை - அனிருத்
எழுதியவர் - விஷ்ணு எடவன்
பாடியவர் - அனிருத்
யு டியூப் பார்வைகள்
லிரிக் வீடியோ - 64 மில்லியன்
https://youtu.be/IqwIOlhfCak
இந்த ஆண்டில் அதிகப் பார்வைகளைப் பெற்று டாப் 10 இடத்தைப் பிடித்த பாடல்களில் விஜய்யின் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. விஜய் முன்னணி கதாநாயகனாக உயர்ந்த காலத்திலிருந்து இப்போது வரையிலும் தனது படங்களில் இடம் பெறும் பாடல்கள் ஹிட்டாக வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். 'லியோ' படம் ஆக்ஷன் படமாக இருந்தாலும் 'நா ரெடி' பாடலுடன் இந்தப் பாடலும் டாப் 10ல் இடம் பிடித்துள்ளது.
யு டியூப் பார்வைகள் அடிப்படையில் இந்த ஆண்டின் டாப் 10 பாடல்களில் அனிருத் இசையமைப்பில் 4 பாடல்களும், தமன் இசையமைப்பில் 3 பாடல்களும், ஜிவி பிரகாஷ் இசையமைத்த ஒரு பாடல், இளையராஜா இசையமைத்த ஒரு பாடல், ஜிப்ரான் இசையமைத்த ஒரு பாடல் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் வந்த பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் 'அக நக' பாடல் இனிமையான பாடலாகக் கவர்ந்தது. 'மாமன்னன்' படத்தில் இடம் பெற்ற 'நெஞ்சமே நெஞ்சமே' பாடல் உருக வைத்தது. 'பத்து தல' படத்தின் 'நீ சிங்கம் தான்' பாடல் ரசிக்க வைத்தது.
சந்தோஷ் நாராயணன் இசையில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் 'மாமதுரை' பாடல் யு டியூப் பார்வைகளைப் பெறவில்லை என்றாலும் பலரது பிளே லிஸ்ட்டில் இடம் பெற்றது.
யுவன்ஷங்கர் ராஜா இசையில் எந்த ஒரு பாடலும் குறிப்பிடும்படியாக அமையவில்லை.. அதிகப் படங்களுக்கு இசையமைத்தவரான சாம் சிஎஸ் இசையில் வந்த பாடல்களும் டாப் 10 பட்டியலில் சேரவில்லை.
புதிய இசையமைப்பாளர்கள், வளரும் இசையமைப்பாளர்கள் இசையமைப்பில் வந்த சில பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை எதிர்பார்ப்பிற்கும் மேலாக ஈர்த்தன. குறிப்பாக ஜென் மார்ட்டின் இசையில் வந்த 'டாடா', ஷான் ரோல்டன் இசையில் வந்த 'குட் நைட்' பாடல்கள், நிவாஸ் கே பிரசன்னா இசையில் 'டக்கர்' படத்தின் 'நிரா…' பாடல் ஆகியவை இளம் ரசிகர்களைக் கவர்ந்தன.
அனிருத் ஹிந்தியில் அறிமுகமான 'ஜவான்' படத்தின் தமிழ் டப்பிங்கில் இடம் பெற்ற 'ஹையோடா பாடல் யு டியூபில் 46 மில்லியன் பார்வைகளைக் கடந்து நேரடிப் பாடல்கள் போல வரவேற்பைப் பெற்றது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் வெளிவந்துள்ள 200க்கும் மேற்பட்ட படங்களின் பாடல்களில் 7 பாடல்கள் மட்டுமே தனித்து 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல்களாக இருக்கிறது. முந்தைய வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் சூப்பர்ஹிட் பாடல்கள் மிகவும் குறைவுதான்.