கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் | பயில்வான் அசிங்கமானவர்! பப்லு பிருத்விராஜ் ஆவேசம் | ரூ.600 கோடி கிளப்பில் இணைந்த அனிமல் படம்! | ரஜினி பிறந்தநாளில் ஸ்டார் படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | விஜய் சேதுபதி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! |
இந்திய மக்கள் தொகை சுமார் 140 கோடி வரை உள்ளது. இந்தியாவில் மொத்தம் 6300 சிங்கிள் தியேட்டர்களும், 3200 மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் உள்ளன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில்தான் அதிகமான படங்கள் வெளியாகின்றன. அம்மொழிகளில் இருந்தே வருடத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் வருகின்றன. இருப்பினும் அவற்றில் அதிகபட்சமாக 50 படங்கள் வரை வசூலைக் குவித்தால் அதுவே பெரிய சாதனைதான்.
140 கோடி மக்களுக்காக, சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்கள், 1000க்கும் மேற்பட்ட படங்கள் ஒவ்வொரு வருடமும் வெளிவந்தாலும் 10 கோடி மக்கள் மட்டுமே தியேட்டர்களுக்குப் படங்கள் பார்க்கச் செல்லலாம். மக்கள் தொகையில் பாதி பேர் தியேட்டர்களுக்கு வந்தால் கூட இந்தியத் திரையுலகம் ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி வருவாயை ஈட்டும். சினிமா சார்ந்த பிற தொழில்கள் மூலமும் அதிக வருவாய் கிடைக்கும்.
இந்த வருடத்தில் இதுவரை வெளிவந்த படங்களில் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்த படமாக 'கேஜிஎப் 2' படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தற்போது வரை இந்தப் படம் 1170 கோடி வரை வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்திய அளவில் 10 கோடி மக்கள் பார்த்த படமாக 'பாகுபலி 2' படம் தான் நூறாண்டு கால இந்திய சினிமாவில் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து இரண்டாவது இடத்தில் 8 கோடி மக்கள் பார்த்த 'கடார்' படம் உள்ளது. 'கேஜிஎப் 2' மூன்றாவது இடத்திலும், 4.9 கோடி மக்கள் பார்த்த 'பாகுபலி' முதல் பாகம் நான்காவது இடத்தில் உள்ளது. 5வது இடத்தை 'ஆர்ஆர்ஆர்' படத்தை 4 கோடியே 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
'கேஜிஎப் 2' படம் இந்த வார இறுதி வரை தியேட்டர்களில் வரவேற்புடன் ஓட வாய்ப்புள்ளது. இதன் மூலம் 1200 கோடி வசூலை இப்படம் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.