Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

துடிப்பது தமிழ்... தமிழ் என்று... : நடிப்பது ஹிந்தி... ஹிந்தி நன்று!

09 மே, 2022 - 11:46 IST
எழுத்தின் அளவு:
Tamil-celebrities-oppose-hindi,-but-they-working-in-Hindi-films

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக தமிழ்ப் பற்றும், ஹிந்தித் திணிப்பும் என பரபரப்பாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழுக்கு ஆதரவாகவும், ஹிந்தித் திணிப்புக்கு எதிராகவும் பல சினிமா பிரபலங்களும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு அதன் மீது பற்றும், பாசமும் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தமிழுக்காகவே தங்களை அர்ப்பணித்தது போல பேசும் சிலர் வெளியில் தமிழ்…தமிழ்…எனப் பேசிவிட்டு, திரை மறைவில் ஹிந்திக்கு வலை வீசுவதையும் பார்க்க முடிகிறது.

தமிழ் சினிமாவில் இன்றல்ல கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தி சினிமா நட்சத்திரங்கள்தான் முன்னணியில் இருந்து வருகிறார்கள். இங்குள்ள தமிழ் பேசத் தெரிந்த, தமிழ் நடிகைகளுக்கு பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வாய்ப்பளிப்பதே இல்லை. தமிழ் நடிகைகளுக்கு சில பல லட்சங்கள் சம்பளம் தந்தாலே போதும். ஆனால், பாலிவுட்டிலிருந்து வரும் நடிகைகளுக்கு கோடிகளில் சம்பளம், அவர்களுடன் வரும் உதவியாளர்களுக்கு சம்பளம் என எத்தனை கோடி செலவானாலும் தரத் தயாராக இருக்கிறார்கள்.

இங்கு வெற்றி பெற்று ஓரளவு பேரும், புகழும் அடைந்த சிலருக்கு உடனே ஹிந்திக்குப் போக வேண்டும் என்று ஆசை. இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலருக்கும் அந்த உண்டு. இங்கிருந்து அங்கு போக வேண்டும் என்ற ஆசையில் சிலர் இருக்க, இங்கு தங்களை நிலை நிறுத்திக் கொள்ள அங்கிருந்து இங்கு ஆட்களை அழைத்து வருபவர்களும் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். அது நடிகை, நடிகர்களுடன் நின்று விடாமல் தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் வரை கூடிக் கொண்டே போகிறது.



ஹிந்தியை தீவிரமாக எதிர்க்கும் திமுக.,வின் வாரிசு நடிகரான உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள படம் தான் நெஞ்சுக்கு நீதி. அந்த படம் ஹிந்தி படமான ‛ஆர்டிக்கிள் 15' படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்குமார் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹிந்தித் தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிப்பில் நடித்து வருகிறார். “நேர்கொண்ட பார்வை, வலிமை” படங்களைத் தொடர்ந்து தன் 61வது படத்தையும் அவர் தயாரிப்பில்தான் நடிக்கிறார் அஜித்.



தமிழில் தொடர்ந்து தன்னை ஒரு தனித்துவமான இயக்குனர் எனக் காட்டிக் கொள்ளும் பா.ரஞ்சித் கடைசியாகத் தயாரித்த 'ரைட்டர்' படத்திற்கு பாலிவுட் தயாரிப்பாளர்களுடன்தான் கூட்டு சேர்ந்துள்ளார். 'பிர்சா முண்டா' வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ஹிந்தியில் இயக்குவதாக அறிவித்தார்.



தங்கள் குடும்பத்தையே தமிழ் ஆதரவாளர் குடும்பமாகக் காட்டிக் கொள்ளும் சூர்யா, அடுத்து ஹிந்திக்குச் சென்றுள்ளார். அங்கு அக்ஷய்குமார் நடிக்கும் 'சூரரைப் போற்று' படத்தை அவர் தயாரிக்கிறார். அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களாக அவர் நடித்த படங்களை ஹிந்தியிலும் டப்பிங் செய்து வெளியிட அவர் எந்த மறுப்பும் சொல்லவில்லை.



சர்ச்சைகள் வரும் போதெல்லாம் தன்னை தமிழுக்கு ஆதரவாகக் காட்டிக் கொள்ளும் ஏ.ஆர்.ரஹ்மான், ஹிந்தியில் இசையமைத்த படங்கள் தான் அதிக வெற்றியை ஈட்டியுள்ளன. அவரை உலக அளவிற்கும் கொண்டு சென்றுள்ளன. இப்போதும் ஹிந்தி சினிமாவை விட்டு அவர் விலகவில்லை.

'ஹிந்தி தெரியாது போடா' என்று டி ஷர்ட் போட்டு பரபரப்பை ஏற்படுத்திய சமயத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ‛ஐயம் தமிழ் பேசும் இந்தியன்' என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்திருந்தார். இவரும் ஹிந்தியில் ராஜா நட்வர்லால் என்ற படத்தில் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்துள்ளார். அதேப்போன்று சமீபத்தில் ஹிந்தியில் டாப் டக்கர் என்ற ஆல்பம் வெளியானது. இதில் ராஷ்மிகா உடன் ஆடி, பாடி, நடித்து இசையும் அமைத்திருந்தார் யுவன்.



யுவனை போன்று 'ஹிந்தி தெரியாது போடா' என்று டி ஷர்ட் போட்டு பரபரப்பை ஏற்படுத்திய தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், 'டாடி' என்ற ஹிந்திப் படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படி முன் வாசலில் ஹிந்தியை எதிர்த்துப் பேசிவிட்டு, பின் வாசல் வழியாக ஹிந்திக்கு சால்வை அணிவித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள் இந்தத் தமிழ் ஆர்வலர்கள். பேசுவது ஒன்று, செய்வது மற்றொன்றாக இருக்கிறது இவர்களது செயல்கள்.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் தொழிலாளர்களுக்கு தமிழ் நடிகர்கள் ஆதரவு தருவார்களா?தமிழ் தொழிலாளர்களுக்கு தமிழ் ... 5 கோடி மக்கள் பார்த்த 'கேஜிஎப் 2' : இந்திய அளவில் எது டாப் தெரியுமா...? 5 கோடி மக்கள் பார்த்த 'கேஜிஎப் 2' : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

ak -  ( Posted via: Dinamalar Android App )
10 மே, 2022 - 09:37 Report Abuse
ak இங்கு யாரும் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை....வேறு மொழியை வலுக்கட்டாயமாக திணிப்பதை தான் எதிர்க்கிறார்கள்... தற்போது கூட ஜிப்மர் மருத்துவமனையில் நடக்கும் சம்பவங்களே சாட்சி...உங்களுக்கு தெரியாமல் இல்லை...
Rate this:
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
10 மே, 2022 - 07:54 Report Abuse
தியாகு அதுல பாருங்க, இங்கு வந்து ஹிந்திக்கு எதிராக கருத்து போடும் கழக அடாவடி அடிமை உடன்பிறப்புகள் மற்றும் அல்லக்கைகளின் வீட்டு குழந்தைகள் ஒன்னு கூட அரசு பள்ளிகளில் இரு மொழி கல்வியை படிக்காது. அனைவரும் பல லட்சங்கள் பீஸ் கட்டி தரமான தனியார் பள்ளிகளில் குறைந்தது நான்கு மொழிகள் படிக்கும். இவ்வளவுதான் இவனுங்க மொழி பற்று. திருந்துங்க டுமிழர்களே.
Rate this:
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
10 மே, 2022 - 07:37 Report Abuse
தியாகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் சம்பளம் 100 கோடின்னு சொல்றாங்க, ஜோசெப் விசய் அண்ணா மற்றும் அல்டிமேட் ஸ்டார் அஜித் அண்ணா மற்றும் ஆண்டவர் (?) கமல் இவர்களின் சம்பளம் 80 கோடின்னு சொல்றாங்க, ஒன்றரை டன் சூர்யா அண்ணாவின் சம்பளம் 60 கோடின்னு சொல்றாங்க, காஃபி வாங்கி குடிக்க சொல்லும் கார்த்தி அண்ணா, அசுரர் தனுஷ் தம்பி இவர்களின் சம்பளம் 40 கோடின்னு சொல்றாங்க, சிரிப்புடன் உதைணாவை சார் என புகழும் சிவகார்த்திகேயன் மற்றும் விரல் வித்தகர் சிம்பு அண்ணாவின் சம்பளம் 20 கோடின்னு சொல்றாங்க, குஷால் அண்ணா சாரி விஷால் அண்ணாவின் சம்பளம் 15 கோடின்னு சொல்றாங்க மற்றும் இதர சில்லறை நடிகர்களின் சம்பளம் குறைந்தது 3 முதல் 5 கோடிகள் என்றும் சொல்றாங்க. இதுதவிர தமிழ் சினிமா ரசிக விசிலடிச்சான் குஞ்சு கிறுக்கு கண்மணிகள் எனது தலைவன் படம் 100 கோடிகள் லாபம், 200 கோடிகள் லாபம் என்று கூவுறானுங்க. ஆனா, நடிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம் கூட்டி நடிகர் சங்க கட்டிடம் கட்ட 30 கோடி பணம் பத்தவில்லை என்றும் வங்கியில் கடன் வாங்கி நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்றும் சொல்றாங்க. இதை எவ்வாறு புரிந்துகொள்வது? திருந்துங்கடா டுமிழ் சினிமா ரசிக விசிலடிச்சான் குஞ்சு கிறுக்கு கண்மணிகளே.
Rate this:
10 மே, 2022 - 07:06 Report Abuse
Tapas Vyas மொழியை வெறுப்பவனே முதலில் முட்டாள். இவர்கள் பை நிறைக்கத் தெரிந்த முட்டாள்கள்.
Rate this:
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
10 மே, 2022 - 06:44 Report Abuse
Kalaiselvan Periasamy உண்மை எப்போதும் சுடும் தானே .
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in