மேடையில் கண்கலங்கிய ஐஸ்வர்ய லட்சுமி | ஆண்ட்ரியாவுக்கு முதன்முறை | சீரியலில் மாஸான என்ட்ரி : வனிதாவின் புது ட்ராக் | அழகு நாயகிகளின் ரீ-யூனியன் | சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன்'', ‛‛பார்வதி'': லீனாவின் அடுத்த ‛‛குசும்பு'' | பொன்னியின் செல்வன் - குந்தவையாக த்ரிஷா | நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன் | காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட அடார் லவ் இயக்குனர் | ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை | போக்சோ சட்டத்தில் ‛கும்கி' நடிகர் கைது |
உலக அளவில் இந்தியத் திரைப்படங்கள் ரூ.500 கோடி வசூல் என்பது ஒரு காலத்தில் கனவாக இருந்தது. ஆனால், அதையும் தாண்டி 1000 கோடி வசூலித்து சாதனை புரிவதுதான் இப்போது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
உலக அளவில் இதற்கு முன்பு மூன்று இந்திய திரைப்படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளன. 2016ல் வெளிவந்த 'டங்கல்' திரைப்படம் முதன் முதலில் உலக அளவில் ரூ.1000 கோடி வசூலைக் கடந்தது. சீனாவிலும் பெற்ற வசூலால் இப்படம் ரூ.2000 கோடி வசூலைக் கடந்து இந்தியப் படங்களின் வசூலில் முதலிடத்தில் இருக்கிறது.
அதற்கடுத்து 2017ல் வெளிவந்த ராஜமவுலியின் ‛பாகுபலி 2' படம் உலக அளவில் ரூ.1810 கோடி வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்து தற்போதும் ஓடிக் கொண்டிருக்கும் 'ஆர்ஆர்ஆர்' படம் ரூ.1100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இதற்கடுத்து ‛கேஜிஎப் 2' படமும் ரூ.900 கோடி வசூலைக் கடந்து ரூ.1000 கோடி வசூலை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இந்த வார இறுதிக்குள் இந்தப் படம் அந்த சாதனையைப் பெற்றுவிடும் என எதிர்பார்க்கிறார்கள். இவற்றில் குறைவான நாட்களில் ரூ.1000 கோடி சாதனையைப் பெறும் படம் என்ற சாதனையை ‛கேஜிஎப் 2' படைக்க வாய்ப்புள்ளது.
தெலுங்கு, கன்னடப் படங்கள் கூட ரூ.1000 கோடி சாதனையைப் படைத்துவிட்டன. ஆனால், தமிழ்ப் படங்கள் 200 கோடி வசூலிப்பதைத்தான் இப்போது பெரிய சாதனையாக கருதிக் கொண்டிருக்கிறார்கள்.