Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

'மீ டூ' அனுபவம் எனக்கு இதுவரை இல்லை : ஆஷ்னா சவேரி

30 நவ, 2018 - 11:50 IST
எழுத்தின் அளவு:
I-did-not-face-MeToo-says-Ashna-zaveri

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் மூலம், தமிழுக்கு வந்தவர் ஆஷ்னா சவேரி. விமலுடன் இவர் நடித்த, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில், படுகவர்ச்சியாக நடித்துள்ளார். அவருடன் பேசியதிலிருந்து:

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு எந்த மாதிரியான படம்?
நீண்ட நாட்களுக்கு பின், நான் நடித்த படம் வெளியாகிறது. ரொம்ப ஜாலியான, காமெடி படம். இளம் ரசிகர்கள் ஒவ்வொருவரும் ரசிப்பர். முதல் முறையாக, இந்த படத்தில், கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளேன்.

தமிழ் நன்றாக பேசுகிறீர்களே?
ஆம், ஓய்வு கிடைத்தபோதெல்லாம், தமிழில் பேசுவதற்கு பயிற்சி எடுத்தேன். படப்பிடிப்பில், அது, எனக்கு பெரிய உதவியாக இருந்தது.

இந்த படத்தில், உங்களுக்கு என்ன கேரக்டர்?
சுரேகா என்ற கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். விமல், சிங்கம்புலி ஆகியோருடன் நடித்தது, ஜாலியாக இருந்தது. அமைதியான குணம் உடைய இளம் பெண்ணாக நடிக்கிறேன்.

சந்தானத்துடன் மீண்டும் ஜோடி சேர்வீர்களா?

கதை பிடித்திருந்தால், நிச்சயமாக அவருடன் ஜோடி சேர்ந்து நடிப்பேன்.

எந்த நடிகையை, உங்களுக்கு போட்டியாக நினைக்கிறீர்கள்?

சினிமாவில், யாரும், யாருடனும் போட்டி போட முடியாது. அவரவருக்கான இடம் நிச்சயம் கிடைத்து கொண்டிருக்கிறது.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் என்ன செய்வீர்கள்?
யோகாவில் எனக்கு அதிக ஆர்வம். அதேபோல், தினமும் உடற்பயிற்சி செய்வேன். ஓய்வு கிடைக்கும்போது, புத்தகங்கள் படிப்பேன்.

தமிழில் யாருடன் நடிக்க ஆசை?
விஜய், அஜித், ரஜினி, கமல் என, எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடிக்க ஆசை.

நாயகியருக்கான பாத்திரம் என்றால் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?
இப்போது பெண்களை மையப்படுத்தும் படங்கள் அதிகமாக வருகின்றன. அதுபோன்ற வாய்ப்பு எனக்கும் கிடைத்தால், சிறப்பாக செய்வேன். அறம் படத்தில், நயன்தாரா நடித்தது போன்ற கேரக்டரில் நடிக்க ஆசையாக உள்ளது.

'மீ டூ'வைப் பற்றி?
இது நல்ல விஷயம் தான். என் முதல் படத்திலிருந்து இதுவரை, அந்த மாதிரி அனுபவங்கள் எனக்கு நடக்கவில்லை.

புத்தாண்டில் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?
புதிதாக எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் புதிதாக கற்றுக் கொண்டே இருக்கிறேன். இப்போது போலவே இருக்க விரும்புகிறேன்.

ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?
ஏதாவது ஒரு வகையில் நம் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, யோகா இல்லையென்றாலும், பிடித்த விளையாட்டை விளையாடுவதன் மூலம், உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசை: நமீதாஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசை: ... எல்லா துறையிலும் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வு உண்டு : சாக் ஷி அகர்வால் எல்லா துறையிலும் பெண்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

BoochiMarunthu - Paradise papers,பனாமா
30 நவ, 2018 - 15:01 Report Abuse
BoochiMarunthu இன்னுமா நடிப்பு ?
Rate this:
Ranganathan Venkata Subramanian - COIMBATORE,இந்தியா
30 நவ, 2018 - 13:27 Report Abuse
Ranganathan Venkata Subramanian இதை நாங்க நம்பிட்டோம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  Tamil New Film Watchman
  • வாட்ச்மேன்
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Indian 2
  • இந்தியன் 2
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :ஷங்கர்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in