Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

பிஜி தீவு பயணம் வித்தியாசமான அனுபவம்! ரெஜினா

18 மே, 2018 - 02:02 IST
எழுத்தின் அளவு:
Fiji-Island-Travel-is-a-strange-experience:-rejina

தமிழ் திரையுலகிற்கு, 2005ம் ஆண்டிலேயே அடி எடுத்து வைத்தாலும், தெலுங்கில் அறிமுகமாகி, விருது வாங்கிய பின், தமிழில், கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் மூலம் அனைவராலும் அறியப்பட்டார், ரெஜினா. அதன் பின்னும் தமிழில் போதிய வாய்ப்பின்றி தெலுங்கிலேயே நடித்து வந்த இவர், தற்போது, மிஸ்டர் சந்திரமவுலி, நெஞ்சம் மறப்பதில்லை படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்; ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார். திரையுலக அனுபவம் குறித்த அவரிடம் பேசியதிலிருந்து:


கார்த்திக் உடன் நடித்த அனுபவம் எப்படி?


கார்த்திக் மிகவும் இனிமையாக பழகக்கூடியவர். உண்மையான மனிதர். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவர் வந்தாலே, படப்பிடிப்பு தளம் கலகலப்பாக மாறி விடும்.


கார்த்திக் மகன், கவுதம் கார்த்திக் உடன் ஜோடியாக நடித்த அனுபவம்?


அவர் நடித்த மூன்று படங்களை பார்த்துள்ளேன். நடிப்பு, நடனம், ஆக் ஷன் என அனைத்திலும், நல்ல திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு.


தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் நடிப்பது பற்றி...


தெலுங்கில் தான், முதன் முதலில் முன்னணி ரோலில் நடித்தாலும், அதற்கு முன், தமிழில் சில படங்களில் நடித்துள்ளேன். என் திரையுலக பயணம், இப்போதைக்கு நன்றாக போய் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிகரமான பயணத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான், என் ஆசை.


தமிழில் படங்களுக்கு இடையே அதிக இடைவெளி ஏன்?


தமிழில், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம் உள்ளிட்ட படங்கள் வெளிவந்துள்ளன. மிஸ்டர் சந்திரமவுலி, நெஞ்சம் மறப்பதில்லை படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. ஒவ்வொரு படத்திற்கும் திட்டமிட்டு இடைவெளி விடுவதில்லை; எல்லாம் அதுவாக தான் நடக்கிறது.


எந்த படங்களில் நடிப்பது என்பதை, எப்படி தேர்வு செய்கிறீர்கள்?


கதை மற்றும் அதில் என் கேரக்டரை வைத்தே, படங்களை தேர்ந்தெடுக்கிறேன். கதைக்காகவே நடிக்கிறேன். எனக்காக கதையில் மாற்றம் செய்வதில்லை;


செய்யவும் முடியாது.


நெஞ்சம் மறப்பதில்லை படம் எப்போது வரும்?


ரசிகர்களை போலவே, நானும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளேன். அனைத்தும் தயாராக உள்ளது. படம் தான் வெளியாக வேண்டும்.


பார்ட்டி படத்திற்காக பிஜி தீவுக்கு சென்றது பற்றி...


பார்ட்டி படத்திற்காக பிஜி தீவில் ஒரு மாதம் இருந்தோம். வித்தியாசமான அனுபவம். வீட்டுக்கே வர முடியாது. 36 மணி நேரம் விமானத்திலேயே பயணிக்க வேண்டும். ரொம்ப நன்றாக இருந்தது. ஜாலியாக படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்து சென்னை வரும்போது, ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. பார்ட்டி பட அனுபவம் மிகவும் புதுமையானது.


சென்னையில் ஷாப்பிங் அனுபவம்?


சென்னையில் நிறைய ஷாப்பிங் போக மாட்டேன். நேரம் இருந்தால், பெற்றோருடன் பீனிக்ஸ் போவேன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புதுமுகங்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன்! - சமந்தாபுதுமுகங்களுக்கு வழிகாட்டியாக ... சாதாரண பெண்ணாக என்னால் இருக்க முடியாது! அமலா பால் சாதாரண பெண்ணாக என்னால் இருக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in