சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. குறும்படப் பிரிவில் ஒளிப்பதிவுக்காக தமிழில் 2022ல் வெளியான 'லிட்டில் விங்ஸ்' தேர்வாகியுள்ளது. இதனை மீனாட்சி சோமன், சரவணன்முத்து சவுந்தரபாண்டி பெறவுள்ளனர். ஏற்கனவே சிறந்த படம், நடிப்பு, கதைக்காக 12 விருதுகளை வென்ற படம் தற்போது தொழில்நுட்ப பிரிவில் தேசிய விருது வென்றுள்ளது.
இந்த வெற்றி குறித்து 'லிட்டில் விங்ஸ்' இயக்குநர் நவீன்குமார் முத்தையாவுடன் (நவீன் மு) தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக கலந்துரையாடிய போது...
சென்னைக்கு எம்.சி.ஏ., படிப்பதற்காக வந்தேன். அப்போது நான் படித்த புத்தகங்கள், சர்வதேச விருது வென்ற சினிமாக்களை பார்க்கும் போது சினிமா மீது ஆர்வம் அதிகரித்தது. முதன்முதலில் இயக்குனர் ராஜூமுருகன் எடுத்த 'ஜோக்கர்' படத்திலும், பின்னர் 'ஜிப்சி' படத்திலும் பணிபுரிந்தேன். தற்போது இயக்குநர் மணிரத்னத்திடம் கமர்ஷியலான சினிமா கற்று வருகிறேன்.
ஆரம்பத்தில் சினிமாவுக்குள் வர நுால்களை படித்தேன். தற்போது அது வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துவிட்டது. சினிமா எனது லைப் ஸ்டைலாக மாறியதற்கு இலக்கியமும் ஒரு காரணம்.
இயக்குநர் மணிகண்டன் எடுத்த 'விண்ட்' குறும்படம் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த முறையில் ஒரு படம் எடுக்க முடிவு செய்தேன். கந்தர்வன் எழுதிய 'சனிப்பிணம்' கதையை படித்து அதை குறும்படமாக எடுக்க முடிவு செய்து, 'லிட்டில் விங்ஸ்' எடுத்தேன்.
கனடாவில் நடந்த தென்கிழக்கு ஆசிய போட்டியில் எனது திரைக்கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த பரிசை அடுத்த படம் எடுப்பதற்கான முயற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. பின் இயக்குநர் ராஜமுருகன் உதவியுடன் லிட்டில் விங்ஸ் எடுத்தேன்.
இதுவரை 12 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கேரள சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆஸ்கார் வென்ற படங்களோடு போட்டி போட்டது. இதில் வருந்ததக்க விஷயம், தமிழில் யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதுவரை சிறந்த படம், நடிப்புக்கு மட்டும் விருது கிடைத்தது. தற்போது தொழில்நுட்பத்திற்கு விருது கிடைத்ததன் மூலம் எங்கள் உழைப்பு வீண் போகவில்லை என உணர்ந்துள்ளோம்.
'லிட்டில் விங்ஸ்' நேரடி ஒளிப்பதிவாக மேற்கொள்ளப்பட்டது. இந்த படத்தில் கேமரா இருப்பது தெரியாது. கதாபாத்திரம் உட்காரும் போது, நடக்கும் போது கேமராவையும் அதற்கு ஏற்ப கொண்டு செல்ல வேண்டும்.
மற்ற நேரங்களில் கேமரா இருந்து கண்காணிப்பது போல் தான் இருக்கும். கதாபாத்திரம் உணர்ச்சியை வெளிப்படுத்தும் போது கேமராவும் தன் உணர்ச்சியை காட்டும். இந்த முறை தான் லிட்டில் விங்ஸ் படத்தில் கையாளப்பட்டது.
திரை இலக்கணம் இலக்கியத்திற்கு எப்படி கவிதை, சிறுகதையோ, அதுபோல் சினிமாவில் குறும்படத்தை கவிதையாக பார்க்கலாம். வேறு வேறு வடிவத்தில் கதை சொல்வதற்கான களம் குறும்படம். சினிமாவில் நேரம் முக்கியம். கதையை ரப்பர் பேண்ட் போல் ரொம்ப இழுத்தால் உடைந்து விடும். ஒரு கருவை குறிப்பிட்ட அளவுக்கு தான் விரிக்க முடியும் என கணக்கிட்டால் தான் குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுக்க முடியும்.
காட்சியை எழுதி முடித்து அதற்கான நேரத்தை கணக்கிடுவோம். லிட்டில் விங்ஸ் 25 நிமிடத்தில் எடுக்க திட்டமிட்டு 20 நிமிடத்தில் முடித்தோம்.
தமிழ் சினிமா சர்வதேச அளவில் செல்லாததற்கு காரணம் நமது நோக்கம் சுருங்கிவிட்டது. படம் எடுத்தவுடன் அதை தயாரிப்பாளரிடம் காட்டி சினிமாவுக்குள் வந்து விடலாம் என்ற நோக்கில் குறும்படம் எடுக்கின்றனர்.
கதைகளை திரைக்கதையாக்க முயற்சி தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை திரைக்கதையாக கொண்டு வர முயற்சித்து வருகிறேன். ஒரு கதை அறம், அன்பு, துரோகம் என ஏதாவது ஒன்றை கூறப்போகிறது. எழுத்தாளரின் நுட்பத்தையும், உண்மையையும் எடுத்துக் கொண்டால் எந்த ஒரு கதையையும் சிறப்பாக சொல்ல முடியும். ஒரு கதை சொல்லப்பட வேண்டும் என்றால் அதுவே நம்மை கருவியாக பயன்படுத்திவிடும். அப்படி ஒரு கதைக்காக காத்திருக்கிறேன் என்றார்.