எஸ்பிபி போல் மூச்சுவிடாமல் பாடி அசத்திய மஹதி! | தொடர்ந்து நாயகிகளுக்கு ‛ரம்யா' பெயர்: ஆதிக் ரவிச்சந்திரனின் ‛சென்டிமென்ட்' | “தம்பி கலக்கிட்டான்” - ‛மிஸ்டர் எக்ஸ்' கவுதம் கார்த்திக்கு ஆர்யா பாராட்டு | மெகா பட்ஜெட்டால் கிடப்பில் போடப்பட்ட பயோபிக் படம் | டோலிவுட் நடிகர்களிடம் சரண்டர் ஆன நடிகை | சினிமாவிலும் சிறகடிக்க ஆசை: மனம் திறக்கும் கோமதி பிரியா | ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்படும் ராஷி கண்ணா | 9 வயதிலேயே பேட் டச்! நேஹா கவுடா சந்தித்த கொடூரம் | ஜி.வி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்துக்கு நான் காரணமா? மனம் திறந்த திவ்யபாரதி | அடுத்தடுத்து இரண்டு சீரியல்களில் கமிட்டான ஷோபனா |
''சாதாரண நடுத்தர குடும்ப பொண்ணு நான். மாநகராட்சி பள்ளியில் அரசு உதவித்தொகையில் தான் படித்தேன். மக்கள் மத்தியில் இந்தளவுக்கு ரீச் ஆவேன் என நினைக்கவில்லை,'' என்கிறார், சின்னத்திரை ஹீரோயின்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள மதுரை கோமதிபிரியா.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் பேசியதிலிருந்து...
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் தான் என் வீடு இருக்கிறது. அப்பா விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்தார். மாநகராட்சி வெள்ளி வீதியார் பள்ளியில் படித்தேன். பள்ளி படிப்பை முடித்து என்ன படிக்கலாம் என யோசித்த எனக்கு தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி உதவியது. அதில் பங்கேற்று என் உயர்படிப்பை தேர்வு செய்தேன்.
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சேர்ந்தேன். அங்கு நான் நன்றாக படிப்பதை அறிந்த கல்லுாரி நிர்வாகம் தேவையான உதவிகளை செய்து என்னை உற்சாகமூட்டியது. பெங்களூரு, சென்னையில் ஐ.டி. நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் கிடைத்தது. ஆனால் என் சாய்ஸ் சென்னையாகவே இருந்தது.
கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டே எத்தனை காலத்துக்கு வேலை செய்வது; ஓரிரு ஆண்டுகளிலேயே போரடித்தது. நான்கு சுவர்களுக்குள் முடங்கி விடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. சிறிய வயதில் சினிமாத்துறை மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது. ஆனால் எப்படி வாய்ப்பு பெறுவது என தெரியாது.
சினிமா துறைக்கு சென்றால் பெற்றோர் ஏற்று கொள்வார்களா என ஐயமும் இருந்தது. இந்நிலையில் மாடலிங் வாய்ப்பு வந்தது. டிவி நிகழ்ச்சி ஒன்றில் மாடலிங், தொகுப்பாளினியாக அசத்தினேன். அப்போதே சின்னத்திரையில் கவனிக்கத்தக்க ஆளாக வருவேன் என சிறப்பு விருந்தினர்கள் பாராட்டினர்.
அதில் கிடைத்த பாப்புலாரிட்டி, புகழ் என்னை சிந்திக்க துாண்டியது. இப்பவே இந்த வரவேற்பு என்றால் பெரிய ஆர்டிஸ்ட் ஆனால் எப்படியிருக்கும் என யோசித்தேன். அதிர்ஷ்டவசமாக ‛ஓவியா' என்ற சீரியலில் கிடைத்த நாயகி வாய்ப்பை பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்தினேன். அது ஓரளவுக்கு பெயர் பெற்று கொடுக்க வரிசையாக தமிழ், தெலுங்கு, மலையாள மொழி சீரியல்களில் வாய்ப்பு கிட்டியது. என் நடிப்பை கவனித்த குடும்பத்தினரும் இத்துறையில் தொடர பச்சைக்கொடி காட்டி விட்டனர். எதை செய்தாலும் சரியாக செய்வேன் என்ற நம்பிக்கையும் என் மீது குடும்பத்தினருக்கு இருந்தது.
தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா என்ற கேரக்டர் என்னை மக்களிடம் நன்றாக கொண்டு போய் சேர்த்தது. அந்த ஆண்டுக்காக சிறந்த சின்னத்திரை நாயகி விருதும் கிடைத்தது. சீரியல்களில் நடித்து கொண்டிருந்த போது அப்பா திடீரென மரணமடைந்தார். படப்பிடிப்பு என்னால் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக மறுநாளே சென்று விட்டேன். இதுவும் தயாரிப்பாளர்களிடம் எனக்கு பெயர் பெற்று தந்தது. குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பும் கூடுதலாக வந்தது. இதனால் முழு மூச்சாக சீரியல்களில் இறங்கினேன்.
இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாள சீரியல்களில் சிறப்பாக நடித்ததற்காக ஆறு விருதுகள் பெற்றிருக்கிறேன். வர்ணம் என்ற படத்திலும் நடித்துள்ளேன். வெள்ளித்திரையை விட சின்னத்திரை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் கொண்டு போய் சேர்த்தாலும், சரியான கதாபாத்திரங்கள் வந்தால் சினிமாவிலும் இறங்குவேன். சினிமாவிலும் சிறகடிக்க ஆசை உண்டு.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மக்களோடு மக்களாக சென்று தரிசிக்கும் என்னை, தற்போது மக்கள் கண்டுகொண்டு அவர்கள் வீட்டு பெண்ணாக பாவித்து அன்பு காட்டுவது பெரிய விஷயம். நாம் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறோமோ அதை இலக்காக கொண்டு கடினமாக உழைத்தால் வெற்றி பெறலாம் என இளம்பெண்களுக்கு சொல்ல விரும்புகிறேன். சாதாரண குடும்ப பெண்ணால் இந்தளவுக்கு சாதிக்க முடிந்தது என்றால் ஏராளமான திறமைகளை கொண்ட மற்ற பெண்களால் முடியாதா என்ன என்ற கேள்வியுடன் நம்மிடமிருந்து விடைபெற்றார்.