குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
மைனா படத்துல தம்பி ராமைய்யாண்ணே வழுக்கையில போன் நம்பர் எழுதுவேன்; சாட்டையில காது கேட்காத வாத்தியார், ரஜினிமுருகன்ல பாத ஜோசியர்... இந்த பாத்திரங்கள்தான் மக்கள்கிட்டே என்னை நெருக்கமாக்குச்சு!
இலை விருந்தின் திருப்தியின் பரிபூரணமாக்கும் வடை, பாயாசம் போல வெகு ஜனங்களை ஈர்த்தவர் இந்த ‛ஹலோ' கந்தசாமி.
அதென்ன ‛ஹலோ' கந்தசாமி?
பூ படத்துல ‛ஹலோ' டீக்கடைக்காரர் பாத்திரம்; அப்போ இருந்து ‛ஹலோ' கந்தசாமி; அதுக்கும் முன்னே 90கள்ல அறிவொளி இயக்க நாடகங்களால ‛காலரா' கந்தசாமி, மதுரை நகைச்சுவை மன்ற பங்களிப்பால ‛கருத்து' கந்தசாமி பட்டங்கள் இருந்தாலும், என் மனசுக்கு நெருக்கமானது... ‛கூத்துப்பட்டறை' கந்தசாமி.
வாய்ப்புகளைத் தேடி கடுமையா ஓடுறதுண்டா?
நாடகத்துறை தந்த 18 ஆண்டுகால அனுபவம் சினிமா வாய்ப்புகளையும் அள்ளித்தருது. 12 ஆண்டுகள்ல 82 படங்கள் பண்ணிட்டேன்!
உங்களை மிரட்டுற ஒரு கேள்வி...
‛ஒரு நடிகரா இருந்தும் ஏன் பைக்ல பயணம் பண்றீங்க'ன்னு மக்கள் கேட்குறாங்க; ‛இந்த துறைக்கு படம் பண்ண வந்தேன்; பணம் பண்ண வரலை'ன்னு என்னால சொல்ல முடியலை!
உங்க பலவீனம்?
‛ரொம்பவும் இறங்கிப் பேசுற மாதிரி தெரியுதுப்பா'ன்னு என் பணிவை என் மகன் சுட்டிக் காட்டுறான்; சிலர் பார்வைக்கு இது என் பலவீனம்!
‛அப்பா - மகன்' உறவு?
மகனோட எந்த ஆசைக்கும் நான் குறுக்கே நிற்கிறதில்லை! இசை படிப்பு, நாடகப் பள்ளின்னு போனவன், ‛மோர்சிங்' கலைஞன் சாப்ளின் சுந்தரா வந்து நிற்கிறான்!
கந்தசாமி எதற்கு அடிமை?
அருப்புக்கோட்டை, வீரலட்சுமி கடை ‛மலாய் கஜா' இனிப்புக்கு அடிமை; படப்பிடிப்பு தளங்களுக்கும் அதை வரவழைச்சு எல்லோருக்கும் கொடுக்கிற அளவுக்கு பெரும் அடிமை!
எதிர்கால திட்டம்?
ஒருபக்கம் ‛நாட்டுக்கோழி' வளர்ப்பு பண்ணை; மறுபக்கம் ‛நாட்டுப்புற கலை' பயிற்சி பண்ணை; மறைஞ்சதுக்கு அப்புறமும் நான் வாழ விரும்புறேன்.