'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

கேரள அரசின் சிறந்த நடன இயக்குனர் விருதை, லலிதா ஷோபி பெற்றுள்ளார். அவர் அளித்த பேட்டி:
கேரள அரசின் விருது பெற்றது குறித்து?
உதவி நடன இயக்குனராக 2,000த்திற்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளேன். நடன இயக்குனராக 30 படங்களில் பணியாற்றியுள்ளேன். தேசிய விருதை போலவே, கேரள மாநில அரசின் விருதும் பெரிதாக பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் ஓ.டி.டி.,யில் வெளியான முதல் மலையாள படம், சுபியும் சுஜாதேயும். இப்படத்திற்கான சிறந்த நடன இயக்குனர் விருது பெற்றேன்.
விருதுடன் விமான நிலையத்திற்கு வந்த போது, கேரள போலீசாரே மரியாதை செலுத்தியது எனக்கு வியப்பாக இருந்தது; அதன் மகத்துவம் தெரிந்தது. இதன் மூலம், என் பிறந்த வீடான தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக கருதுகிறேன். என் மாமியார் கேரளாவைச் சேர்ந்தவர் என்ற வகையில், புகுந்த வீட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளேன்.
இசை ஆல்பம் அதிகம் வருவது குறித்து?
கொரோனாவின் தொடர் தாக்கத்தால் மற்ற துறைகளை காட்டிலும், சினிமா துறை தான் அதிகம் பாதித்தது. சினிமாவில் பாடல்கள் குறைந்து வருவதாலும் இசை ஆல்பம் தற்போது அதிகம் வெளியாகின்றன.
எந்த மாதிரியான சவால்களை விரும்புகிறீர்கள்?
பெண் நடன இயக்குனர் என்றால் இதை தான் செய்வர் என்ற கருத்து உள்ளது. எந்த வகையான பாடலுக்கும் எங்களால் பணியாற்ற முடியும். 'சிங்காரி சரக்கு...' பாடலுக்கு ஆட்டுவித்தது, புலியூர் சரோஜா மாஸ்டர் தானே. பாலிவுட்டில் பராகான், சரோஜ்கான் உள்ளிட்ட நிறைய பெண் நடன இயக்குனர் உள்ளனர். கேரளா சினிமாவில் பெண் நடன இயக்குனர்களே இல்லை. தமிழகத்தில் குறைவாக இருப்பது மனவருத்தம் தான். பாலிவுட்டில் புதுப்புது பாணி நடனத்தை கொண்டு வருகின்றனர். இங்கும் சினிமாவில் பாடல்கள் நிறைய வர வேண்டும்; அதில் பல நல்ல பரிமாணங்களையும், புதிய பாணியையும் தர காத்திருக்கிறேன்.
யாரை ஆட்டுவித்தது கடினமாக இருந்தது?
என்னால் கற்கவும் முடிந்தது; கற்றுக் கொடுக்கவும் முடிந்தது. எதையுமே கடினமாக கருதியதில்லை. நான் தான் எப்போதும் 'பெஸ்ட்' ஆக இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.




