குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
சின்ன சிரிப்பில் மயக்கும் மேயாத மான்... பார்த்தாலே பிடிக்கும் மலர் முகம்... பார்வையில் படபடக்கும் பட்டாம்பூச்சி துடிப்பு, ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் அழகிய நடிப்பு... என ரசிகர்கள் இதயங்களை கவர்ந்த பேரழகு புயல் நடிகை பிரியா பவானி சங்கர் மனம் திறக்கிறார்...
பிரியாவுக்கு 2021 எப்படி இருந்தது?
மூன்று படங்கள், எதிர்பாராமல் ‛களத்தில் சந்திப்போம்' ரிலீஸ் ஆனதில் சந்தோஷம். அதற்கு பின், ‛ஓ மணப் பெண்ணே'வை பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாடினர். ஓ.டி.டி.யில் வந்த ‛பிளட் மணி' உணர்வுப்பூர்வ படமாக அமைந்தது. மொத்தத்தில் 2021 சந்தோஷம் அள்ளி தந்தது.
‛பிளட் மணி'யில் மீண்டும் பத்திரிகையாளராக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
இந்த படம் சவாலாக இருந்தது. தனுஷ்கோடி போன்ற இடங்களுக்கு நிறைய பயணம் செய்தோம். வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். இதில் நான் மீண்டும் பத்திரிகையாளராக நடித்தது ஸ்பெஷலாக இருந்தது.
தெலுங்கு, தமிழ் படங்களில் சமீப காலமாக பிஸியாக இருக்கீங்க போல?
பிஸி எல்லாம் இல்லை... நாக சைதன்யா, மோகன்பாபு மகன் மேனாஜ் உடன், நடிகர் பிரபாஸ் தயாரிப்பில், தமிழில் விஷால், ஜெயம் ரவி உடன் நடிக்கிறேன். அடுத்து ‛இந்தியன்' படமும் இருக்கு. தெலுங்கு பேச கற்றால் நடிப்பது சுலபம் என்பதால் தற்போது கற்றுக் கொள்கிறேன்.
தமிழ், தெலுங்கு... எதில் அதிக சம்பளம் கிடைக்கிறது?
தெலுங்கில் இப்போத தான் நடிக்க ஆரம்பித்துள்ளேன்... 3 ஆண்டுகளுக்கு பின் கேட்டால் கரெக்டா பதில் சொல்வேன். ஆனால் தமிழில் அறிமுகமான படத்தை விட தெலுங்கில் அறிமுகமாகும் படத்திற்கு சம்பளம் அதிகம் தான். ஆனால் தமிழில் நடிப்பது தான் ஈஸி.
எந்த மொழி படங்களில் நடிப்பது உங்களுக்கு வசதியாக உள்ளது?
தமிழ் சொந்த மொழி என்பதால் தமிழில் எனக்கு நடிப்பது ரொம்ப சுலபமா இருக்கு. ஆனா தெலுங்கிலும் நிறைய படங்களில் நடிக்கணும்னு ஆசைப்படுறேன், அதுக்கு மொழி ஒரு தடையாக இருக்க கூடாது. அதனாலதான் இப்ப தெலுங்கு கத்துக்குறேன். அங்க நிறைய படங்கள் நடிக்கணும்னு ஆசை எனக்கு எப்பவுமே இருக்கு.
ரசிகர்கள் உங்களை பக்கத்து வீட்டு பெண்ணாகவே பார்க்கிறார்களே?
நடிக்கும் முன் ‛டிவி' செய்தி வாசிப்பாளராக பணியாற்றியபோது மக்களுக்கு என் முகம் நன்றாக பழகி போனது. மக்களுக்கு நம்மை பிடிக்க வேண்டும் என்று தான் மீடியாவில் அனைவரும் எதிர்பார்ப்பர். கொஞ்சம் அது நடந்தது பெரிய பிளஸ்.
அடுத்து ரிலீஸ்க்கு காத்திருக்கும் தமிழ் படங்கள் என்ன?
அருண் விஜய் உடன் ‛யானை', தனுஷ் உடன் ‛திருச்சிற்றம்பலம்', பொம்பை, ருத்ரன் உட்பட சில படங்கள் ரிலீஸாகிறது.
என்னென்ன படங்கள் கமிட்டான படங்கள்?
விஷால் கூட ஒரு படம் ஜெயம் ரவி கூட ஒரு படம் இந்தியன் 2 இருக்கு