ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
வெண்மேக கூட்டங்கள் செதுக்கிய பொன் மேகம்... மலர் துாரிகை தீட்டிய பெண் மோகம்... செவ்விதழ் சிந்தும் சிரிப்பில் பாடும் சந்தம், பேரழகுக்கு எல்லாம் இவள் தானே சொந்தம், வில் புருவங்களுக்கு கீழே விழியெனும் அம்புகள், தேகமெங்கும் சிலிர்க்கும் அழகின் அரும்புகள் என மயக்கும் நடிகை வைஷ்ணவி அருள்மொழி மனம் திறக்கிறார்...
யூ டியூப் தளத்தில் நடிக்க வந்தது எப்படி?
பிறந்தது ஜம்மு காஷ்மிர், வளர்ந்தது மதுரை. ஏரோநாடிக்கல் இன்ஜினியரிங் படிச்சிருக்கேன். 'சிவப்பு மஞ்சள் பச்சை' இசையமைப்பாளரான எனது அண்ணன் சித்துகுமாரின் நண்பர் கிரண் அலெக்ஸ் 'யூ டியூப்' தளம் இயக்குனர். அவர் ரக் ஷாபந்தனுக்கு அண்ணன், தங்கை கான்சப்ட்டில் நடிக்க கேட்டு முதலில் நடித்தேன்.
சீரியல் டூ சினிமா வாய்ப்பு கிடைத்த கதை
என்னுடன் 'மாம் வெர்சர்ஸ் ஒய்ப்' வெப் சீரிஸ் நடித்த கீதா சரஸ்வதி வழி'மலர்' சீரியல் வாய்ப்பு வந்தது. 'அழகு', 'நாம் இருவர் நமக்கு இருவர்' நடிக்கிறேன். நெக்ஸ்ட் 'சபாபதி' படத்தில் சந்தானம், பெயரிடாத ஒரு படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாக நடிச்சிருக்கேன்.
ஒவ்வொரு கேரக்டர்களுக்குமான நடிப்பு
என்ன கேரக்டர் கொடுத்தாலும் அதில் வித்தியாசமா நடிக்கனும்னு நினைப்பேன். தற்போது நடிக்கும் சீரியலில் கல்யாணம் முன், பின் என நடிப்பில் வித்தியாசம் காட்டியிருப்பேன். மதுரைக்காரரான 'நாம் இருவர் நமக்கு இருவர்' இயக்குனர் தாய் செல்வம் நிறைய சுதந்திரம் கொடுப்பார். நான் ஐடியா கொடுத்தால் ஓ.கே., சொல்லி நடிக்க வைப்பார்.
இனிமேல் சினிமா மட்டும் தானா சீரியல்கள்
சினிமா, சீரியல் என எதில் நல்ல கேரக்டர்கள் கிடைச்சாலும் கண்டிப்பா நடிப்பேன். நல்லா பிளான் செய்து செயல்பட்டால் எதையும் நம்மால் சாதிக்க முடியும். அதனால் இரண்டு தளங்களையும் விடமாட்டேன்.
வைஷ்ணவி ரொம்ப ஸ்டிரிக்ட் பொண்ணா?
இல்லைவே இல்லை நான் அதிகம் பேசுற, ரொம்ப ஜாலியான பொண்ணு. 'மலர்' சீரியல் என் அக்கா கேரக்டரை காலய்க்கிறது, விட்டு கொடுக்காமல் பேசுறது போல் தான் நிஜ வாழ்க்கையிலும் என் கேரக்டர் இருக்கும்.
மதுரையில் இருந்து சென்னைக்கு போனது
வேலைக்காகசென்னைபோனேன். இப்பவும் யாராவது எந்த ஊர்னு கேட்டு 'மதுரை'னு சொன்னா 'மதுரைன்னு சொல்லும் போதே கெத்தா' தான் சொல்லுவீங்களானு கேட்பாங்க. அந்த அளவு மதுரை கெத்தான ஊர்னு நினைக்கும் போது பெருமையா இருக்கும்.
பெயருக்கு பின்னால் அம்மா அருள்மொழி
எனக்கு அம்மா தான் எல்லாமே... ஆசிரியரா வேலை பார்த்து எனக்கு அம்மாவா, ஆசிரியரா வாழ்க்கையை கற்று கொடுத்த அவங்க பெயரே என் பெயருக்கு பின்னாடி எழுதறதை பெருமையா நினைக்கிறேன்.