விஜய் டிவி பிரபலமான புகழ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் ரீச்சானார். தொடர்ந்து சினிமாவில் காமெடியனாக என்ட்ரி கொடுத்து தற்போது ஹீரோவாக ஜூ கீப்பர் படத்தில் நடித்துள்ளார். அண்மையில் ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ள குக் வித் கோமாளி சீசன் 5லும் கோமாளியாக நுழைந்துள்ளார். நிகழ்ச்சி தொடங்கி சில நாட்களே ஆகியுள்ள நிலையில், புகழ் தனது மனைவி குழந்தையை அழைத்துக் கொண்டு ஜப்பானுக்கு ஜாலியாக டூர் சென்றுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.