ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் டிவியின் 'ஜோடி நம்பர் 1', 'பாய்ஸ் வெசஸ் கேர்ள்ஸ்' ஆகிய நடன நிகழ்ச்சிகளின் அறிமுகமான சுனிதா, அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் படங்கள், சீரியல்கள் என நடித்து வருகிறார். அதேபோல் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' சீசன்களிலும் கோமாளியாக என்ட்ரி கொடுத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார். தற்போது கேரியரில் அடுத்தக்கட்டமாக சந்தோஷ் பிரதாப்புடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கும் சுனிதா, தனது நீண்ட நாள் கார் கனவை நனவாக்கியுள்ளார். அவர் வாங்கிய காரின் விலை 60 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்த சுனிதா தனது கடின உழைப்பால் மிகவும் விலையுயர்ந்த சொகுசு ரக காரை வாங்கியுள்ளார். சுனிதாவின் இந்த மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்துகொள்ளும் ரசிகர்கள் அவர் மேன்மேலும் உயர வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.