தென்னிந்திய சினிமாவில் முன்னணி பின்னணி பாடகி சுனிதா. டப்பிங் கலைஞராகவும் இருக்கிறார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். சுனிதாவுக்கு 19 வயதிலேயே திருமணம் முடிந்தது. பின்னர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகள் ஸ்ரேயா பாடகியாக இருக்கிறார்.
சுனிதா தற்போது 2வது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ராம் வீரப்பனேனி என்பவரை காதலித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தன் காதலை முறைப்படி அறிவித்து திருமணம் செய்யப்போவதாகவும் கூறியிருந்தார். அதன்படி இவர்கள் திருமணம் நேற்று ஐதராபாத் அருகே உள்ள ஸ்ரீ சீதாராம கோவிலில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.