செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தமிழன்னைக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் அண்மையில் 'மூப்பில்லா தமிழே தாயே' என்ற பாடல் வெளியானது. அனைத்து தரப்பு தமிழ் மக்களிடமும் பெரும் ஆதரவை பெற்று வரும் இந்த பாடலில் முன்னணி சீரியல் நடிகை ஒருவரும் பாடியுள்ளார். அவர் வேறு யாருமில்லை, தமிழ் மக்களின் மனதில் சுந்தரியாக இடம்பிடித்திருக்கும் கேப்ரில்லா செல்லஸ் தான்.
நடிப்பின் மீது தீரா காதல் கொண்ட கேப்ரில்லா நன்றாக பாடவும் செய்வார். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த 'மூப்பில்லா தமிழே தாயே' பாடலில் கேப்ரில்லா செல்லஸூம் ஒரு சிறு ராப் போர்ஷனை பாடியுள்ளார். மேலும், பாடல் டெஸ்கிரிப்ஷனில் கேப்ரில்லாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதனை பகிர்ந்துள்ள கேப்ரில்லா, 'இந்த பாடலில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை எனக்கு கிடைத்த வரமாக கருதுகிறேன்' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து கேப்ரில்லாவிற்கு பலரும் தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.