தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்தத் தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

பல்வேறு தடைகளை உடைத்து இன்று சின்னத்திரையின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஷெரின் ஜானு .
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் வரும் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷெரின் ஜானு சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ஆனால், ஷெரின் இந்த இடத்தை சாதரணமாக பிடித்துவிடவில்லை. தன் சொந்த குடும்பத்தையே எதிர்த்து தான் சாதித்து காட்டியிருக்கிறார். சென்னையில் பிறந்த ஷெரின் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஷெரின் முதலில் டிக் டாக் வீடியோக்களின் மூலம் பிரபலமானார். இதன் மூலம் அவருக்கு ஆல்பம் சாங்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஷெரின் குடும்பத்தினருக்கு அவர் நடிக்க செல்வது சுத்தமாக பிடிக்கவில்லை. நடிப்பதற்காக மிகவும் போராடிய ஷெரினுக்கு அவரது தாயார் மட்டும் துணையாக இருந்து ஊக்கப்படுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் கலர்ஸ் டிவியின் திருமணம் சீரியலில் அறிமுகமான ஷெரின் நெகடிவ் ஷேடில் நடித்து தன் திறமையை நிரூபித்தார். தொடர்ந்து நடிகை குஷ்புவுடன் இணைந்து லெட்சுமி ஸ்டோர்ஸ் தொடரிலும் ஜொலித்தார். தொடர்ந்து விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்து வரும் ஷெரின் தற்போது சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமாக மாறியுள்ளார். லீட் ரோலில் நடிக்காமலேயே மிக குறுகிய காலக்கட்டத்தில் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஷெரின் ஜானு சின்னத்திரையில் மோஸ்ட் வாண்டட் நடிகையாகவும் பிரபலமாகியுள்ளார்.




