உன் குறிக்கோள் சரியாக இருந்தால் ஒவ்வொரு அடியும் உனக்கானது : கேப்ரில்லா செல்லஸ் | விதவிதமான புடவைகளில் அழகாக போஸ் கொடுத்த கண்மணி மனோகரன்! | ஆல்யாவை போல போஸ் கொடுத்த அய்லா | உங்களில் யார் அடுத்த ஸ்டார் : ஜீ தமிழ் நடத்தும் மெகா ஆடிசன் | நவாசுதீன் சித்திக்கிற்கு பிரென்சு ரிவேரியா விருது | கங்குலி வாழ்க்கையை இயக்குவது ஐஸ்வர்யா ரஜினிகாந்தா? | பிக்பாஸ் 6ல் இமானின் மாஜி மனைவி பங்கேற்கிறாரா? | கமல் பேசிய ஆபாச வசனத்தை போஸ்டராக ஒட்டிய ரசிகர்கள் மீது வழக்கு பதிவு | பாலியல் தொழிலாளியாக நடித்த அனுபவம் : வினித்ரா மேனன் | 'விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர்: கமல் |
சின்னத்திரை டாப் நடிகை பவித்ரா ஜனனி வெள்ளித்திரையில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் டிவி நடிகையான பவித்ரா ஜனனி தற்போது மிகவும் பிரபலமான முகமாக மாறியுள்ளார். சின்னத்திரையில் தொடர்ந்து சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து வந்த பவித்ரா 'ஈரமான ரோஜாவே', 'தென்றல் வந்து என்னைத் தொடும்' ஆகிய தொடர்களில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.
சின்னத்திரையை தாண்டி சோஷியல் மீடியாக்களிலும் இவருக்கு ஏராளமான பாலோவர்கள் உள்ளனர். சமீப காலங்களில் போட்டோஷூட்களில் அதிக கவனம் செலுத்தி வந்த பவித்ராவின் புகைப்படங்கள், வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்போது அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்துள்ள பவித்ரா ஹீரோயினாக நடிக்கிறாரா? அல்லது வேறு ஏதும் கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சின்னத்திரையில் அழகிய தென்றலாக வலம் வந்த பவித்ரா தற்போது வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்கும் செய்தியை அறிந்த பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.