நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் முக்கிய இடத்தை பிடித்த சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து முழுக்கு போடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தீவிரமாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார்.
சமந்தா திருமணம் செய்து நேற்றோடு நான்காண்டுகளாகிறது. ஆனால் இந்த திருமணநாளில் அவர் கணவருடன் இல்லை. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் சமந்தா வெளியிட்டிருக்கும் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அதில் ஒரு போட்டோவை பகிர்ந்து, ”பழைய காதலின் பாடல்கள் - மலைகளிலும் பாறைகளிலும் குளிர்காற்று வீசும் சத்தம், தொலைந்து மீட்டெடுக்கப்பட்ட படங்களின் பாடல்கள். பள்ளத்தாக்கில் மனச்சோர்வு எதிரொலி மற்றும் பழைய காதலர்களின் பாடல்கள். பழைய பங்களாக்கள், படிக்கட்டுகள் மற்றும் சந்துகளில் காற்றின் ஒலி” எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதுவொரு பேஷன் ஷோ-வுக்காக போடப்பட்ட பதிவு என்கிறார்கள்..
கடந்த ஆண்டு இதே நாளில், ”நீ எனக்கானவன் நான் உனக்கானவள், எந்த கதவு வந்தாலும் அதை நாம் ஒன்றாக திறப்போம். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்” என நாகசைதன்யாவுக்கு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.