சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
பிரபல பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி. தமிழில் வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை, நடுநிசி நாய்கள், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு முன்பு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
தற்போது சமூக வலைதளங்களில் உடற்பயிற்சி, யோகா குறித்த வீடியோக்கள் வெளியிட்டு வகுப்புகள் எடுத்து வருகிறார். இந்நிலையில் சமீரா ரெட்டி மேக்கப் எதுவும் இல்லாமல் நரைத்த தலைமுடியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துணிச்சலுடன் வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா என்ற விமர்சித்தும் வருகிறார்கள்.
இதற்கு பதிலளித்து சமீரா ரெட்டி கூறியிருப்பதாவது: நான் இப்போதெல்லாம் தலைக்கு கருப்பு சாயம் பூசுவதிலை. இதுகுறித்து என் தந்தை கவலை அடைந்தார். தலைக்கு சாயம் பூசாவிட்டால் நான் அழகில்லாத பெண்ணாகி விடுவேனா என்று அவரைக் கேட்டேன். நான் இப்போது அதற்கெல்லாம் கவலைப்படுவதில்லை என்றும் அவரிடம் சொன்னேன்.
வழக்கமாக பிறர் என்னுடைய நரைமுடியை பார்த்துவிடக் கூடாது என்பதற்காக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நான் தலைமுடிக்கு கருப்பு நிறம் பூசி வந்தேன். ஆனால் தற்போது எனக்கு நேரம் கிடைக்கும்போது நான் விரும்பினால் மட்டுமே பூசுகிறேன். பழைய நடைமுறைகளை உடைக்கும்போது தான் புதிய மாற்றங்கள் தொடங்குகின்றன. என் தந்தை என்னை புரிந்து கொண்டார்.
ஒரு தகப்பனாக அவருடைய கவலைகளை நானும் புரிந்து கொண்டேன். ஒவ்வொரு நாளும் சின்னச் சின்ன மாற்றங்களின் வழியாக நாம் முன்னோக்கிச் சென்று பலவற்றை கற்றுக் கொள்கிறோம். அவை சிறிய அடிகளாக இருந்தாலும் அவை நம்மை மிகப்பெரிய இடங்களுக்கு கொண்டு செல்லும்.
இவ்வாறு சமீரா ரெட்டி கூறியுள்ளார்.