புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு |
நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா ஆரம்ப காலத்தில் தனது தந்தையின் நடன குழுவினரில் ஒருவராக இருந்து, பின் தனியாக நடன இயக்குனராக மாறி, அதன்பின் நடிகராக மாறி பின்னர் இயக்குனராக மாறியவர். அவரது மூத்த சகோதரரான ராஜசுந்தரமும் இதே பாணியை பின்பற்றி நடிகராக இயக்குனராக மாறினாலும் இரண்டிலுமே ஜொலிக்க முடியாமல் தற்போது நடன இயக்குனராக மட்டும் பணியாற்றி வருகிறார்.
பிரபுதேவாவின் இளைய சகோதரர் நாகேந்திர பிரசாத்தும் சகோதரர்கள் பயணித்த பாதையை பின்பற்றினாலும் நடிகராக பிரகாசிக்க முடியவில்லை. இந்த நிலையில் தனது அண்ணனின் பாணியைப் பின்பற்றி தற்போது இயக்குனராக மாறியுள்ளார் நாகேந்திர பிரசாத். ஆம். கன்னடத்தில் நடிகர் கிருஷ்ணாவை வைத்து இவர் லக்கிமேன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் கன்னட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் நடிக்கிறார். இந்த நிலையில் தம்பியின் படத்தை புரமோட் பண்ணும் விதமாக, இந்த படத்தில் புனித் ராஜ்குமாருடன் பிரபுதேவாவும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். இந்த பாடலுக்கு பிரபுதேவாவே நடனமும் வடிவமைத்துள்ளாராம்.