ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட ஏழு நகரங்களை ஒன்றிணைத்துள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டில் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட நகரங்களில் நீண்ட நாட்கள் தங்கி வேலை பார்க்கவும், வசிக்க கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின. இப்படிப்பட்ட ஒரு சிறப்பு சலுகையை ஒவ்வொரு குறிப்பிட்ட துறையில் சாதித்த வெகு சிலருக்கு மட்டுமே வழங்கி வருகிறது ஐக்கிய அரபு அமீரக அரசு.
அந்தவகையில் கேரளாவின் அடையாளமாக திகழும் மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி இருவருக்கும் சமீபத்தில் கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. அதை தொடர்ந்து முன்னணி நடிகராக வளர்ந்து வரும் டொவினோ தாமஸும் கோல்டன் விசா பெற்றார்.
இந்த நிலையில் தந்தை மம்முட்டியை தொடர்ந்து மகன் துல்கர் சல்மானுக்கும் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு. இந்த தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ள துல்கர் சல்மான், “எதிர்காலத்தில் அபுதாபி அரசு சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் இன்னும் அதிக கவனம் எடுத்து திட்டங்களை செயல்படுத்தப் போவதாக கூறியுள்ளனர். அந்தவகையில் வரும் காலங்களில் சினிமா தொடர்பாக அதிக நாட்கள் இங்கேயே செலவிடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” என கூறியுள்ளார்