ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மோகன்லால், மீனா நடித்த த்ரிஷ்யம் படம் மலையாள சினிமாவில் சரித்திரம் படைத்தது. வெள்ளி விழா கொண்டாடிய இந்த படம் ரூ.100 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்ற பெருமையை பெற்றது. பேமிலி க்ரைம் த்ரில்லராக உருவாகி இருந்த இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்திருந்தார். இதன் இரண்டாம் பாகமும் வெளிவந்து பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
அதற்கு பிறகு இந்த படம் பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆனது. கமல்ஹாசன், கவுதமி நடித்தனர். அதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ரீமேக் ஆனது. இதுதவிர சிங்களம், சீன மொழிகளில் ரீமேக் ஆனது. தற்போது இந்தோனேஷிய மொழியில் ரீமேக் ஆக உள்ளது. இந்தோனேஷிய மொழியில் ரீமேக் ஆகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை த்ரிஷ்யம் பெற்றுள்ளது. இந்த தகவலை தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
மேற்கண்ட மொழிகள் தயாரிப்பாளரிடம் முறையாக அனுமதி பெற்று ரீமேக் செய்யப்பட்டவை. அனுமதி பெறாமலும் பல மொழிகளில் சின்ன சின்ன மாற்றங்களுடன் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. த்ரிஷ்யம் 2 தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு விட்டது. மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழில் மீண்டும் கமலே நடிக்கிறார். கவுதமிக்கு பதில் இன்னொரு நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.