நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடிக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருகிறது. அங்கு படத்திற்கான முக்கிய பாடல் காட்சி ஒன்று படமாகி வருகிறது. அதில் கார்த்தி கலந்து கொண்டு நடித்தார். இதோடு இவர் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
ஏற்கனவே இப்படத்திற்கான தங்களது படப்பிடிப்பை ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் முடித்தார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது கார்த்தியும் தன்னுடைய படப்பிடிப்பை முடித்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து கார்த்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : இளவரசி த்ரிஷா நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. இளவரசேசசசசச ஜெயம் ரவி என் பணியும் முடிந்தது'' என படத்தில் குந்தவை ஆக நடிக்கும் த்ரிஷாவையும், அருள்மொழி வர்மன் ஆக நடிக்கும் ஜெயம் ரவியையும் டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சில நாட்களில் பொன்னியின் செல்வன் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் என தெரிகிறது. விரைவில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர், மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.