இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் அண்ணாத்த படம் நவம்பர் 4ம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என எப்போதோ அறிவித்துவிட்டார்கள். அதே நாளில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன், கல்யாணி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் மாநாடு படம் வெளியாகும் என இரு தினங்களுக்கு முன்பு திடீரென அறிவித்தார்கள்.
அண்ணாத்த படத்திற்குப் போட்டியாக மாநாடு படம் வருவது திரையுலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தீபாவளிக்கு அஜித் நடிக்கும் வலிமை படமும் வருமா என்பது குறித்தும் தற்போது கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் கடந்த மாதம் 23ம் தேதி திறக்கப்பட்டது. எப்படியும் தீபாவளிக்கு முன்னதாக 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிவிடுவார்கள் என திரையுலகத்தில் எதிர்பார்க்கிறார்கள்.
அண்ணாத்த படத்தைத் தயாரித்துள்ள நிறுவனம் திமுக.,விற்கு நெருக்கம் என்பதால் எப்படியும் அந்த அனுமதி கிடைக்கும் எனத் தெரிந்தே தான் மாநாடு படத்தையும் வெளியிட முடிவு செய்திருக்கலாம் என திரையுலகத்தில் கிசுகிசுக்கிறார்கள்.
ஒருவேளை 50 சதவீத இருக்கை தொடர்ந்தால் அண்ணாத்த பட வெளியீடு தள்ளிப் போகவும் வாய்ப்புண்டு. அதனால், போட்டிக்கு வேறு எந்தப் படமும் இல்லாத நிலையில் மாநாடு படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கலாம்.
தீபாவளிக்கு அண்ணாத்த, மாநாடு ஆகிய படங்களை அறிவித்துவிட்டதால் வலிமை படம் அந்தப் போட்டியில் களமிறங்குமா அல்லது அதற்கு முன்னரோ, பின்னரோ வெளியாகுமா என்பது விரைவில் தெரிய வரும்.