இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை பார்வதி நாயர். கடந்த 2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். சிறிய கதாபாத்திரம் என்றாலும், அவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மலையாள நடிகையான இவர், 'உத்தம வில்லன்', 'என்கிட்ட மோதாதே', 'நிமிர்', 'மாலை நேரத்து மயக்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வைபவ் நடிப்பில் உருவாகி வரும் 'ஆலம்பனா' படத்தில் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் விளம்பரங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. அடுத்த மாதம் தொடங்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் என சமூகவலைதளங்களில் பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நடிகை பார்வதி நாயர், நடிகர் ஜான் விஜய் மற்றும் சீரியல் நடிகை பாவனி ரெட்டி ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.ஜி.பி முத்து, ரம்யா கிருஷ்ணன், 'மைனா' நந்தினி, 'மைனா' சூசன், வடிவுக்கரசி, ரமேஷ் கண்ணா, நடிகை ஷகிலாவின் மகள், லட்சுமி ராமகிருஷ்ணன் என பட்டியல் நீள்கிறது.