படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்த ஷங்கர், மற்ற மொழிகளில் அதிகமாகப் படங்களை இயக்கவில்லை. 'முதல்வன்' படத்தை மட்டும் ஹிந்தியில் 'நாயக்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால், அந்தப் படம் ஓடவில்லை. அதன்பிறகு அவர் தமிழ்ப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் தெலுங்கு, கன்னடப் பட இயக்குனர்கள் கூட பிரம்மாண்டப் படங்களை இயக்கி பான்-இந்தியா இயக்குனர்கள் எனப் பெயரெடுத்துவிட்டனர். எனவே, ஷங்கரும் பான்-இந்தியா இயக்குனர் எனப் பெயர் வாங்க தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை ஆரம்பிக்க உள்ளார்.
இப்படத்திற்கு தமன் இசையமைக்க, கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தை செப்டம்பர் 8ம் தேதி முதல் ஆரம்பிக்க இருந்தார்கள். அது தற்போது செப்டம்பர் கடைசிக்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டதாம்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் சில விடுபட்ட காட்சிகளை எடுப்பதற்காக ராம் சரணிடம் 20 நாட்கள் வேண்டுமென ராஜமவுலி கேட்டுள்ளாராம். மேலும், 'ஆச்சார்யா' படத்திலும் ராம் சரண் நடிக்க வேண்டியுள்ளதாம். அந்த படப்பிடிப்புகளை முடித்த பிறகு தனது படத்தை ஆரம்பிக்கலாம் என ஷங்கர் சொல்லிவிட்டதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போதுதான் படப்பிடிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிட உள்ளார்களாம்.