அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வட சென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், க/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் இவர், துருவ நட்சத்திரம், பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான திட்டம் இரண்டு படமும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அவ்வப்போது போட்டோ ஷூட்டிலும் ஆர்வம் காட்டுவார் ஐஸ்வர்யா. சமீபகாலமாக போட்டோஷூட்டில் கொஞ்சம் கவர்ச்சி காட்ட துவங்கி உள்ளார். இந்த முறை கொஞ்சம் இறங்கி வந்து, கவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்துள்ளார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள சிகப்பு நிற மாடர்ன் உடையில் கவர்ச்சிகரமாக வந்துள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.