பிளாஷ்பேக்: தணிக்கைக் குழுவினரால் வெற்றியைத் தவறவிட்ட “காஞ்சித் தலைவன்” | என் அண்ணன், பாட்ஷா, டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள் | டப்பிங் படங்களை கண்டு கொள்ளாத தமிழ் ரசிகர்கள் | ஆயிரத்தில் ஒருத்தி சாரா அர்ஜுன் | சரிதாவை பார்க்க சுந்தர்.சி மகளின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த சுசித்ரா மோகன்லால் | மோகன்லால் 366வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | “போரை விரும்பாதவர்களுக்கான படம்” : நீளிரா படத்துக்கு சூர்யா பாராட்டு | இரண்டாவது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சோனம் கபூர் | பேஷன் ஐகானாக உருவெடுக்கும் ஸ்ரீலீலா | உலக அரங்கில் மீண்டும் ராஷ்மிகா |

பிரபல நடன இயக்குனரான சாண்டி மாஸ்டருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சாண்டி மாஸ்டருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் சாண்டி மாஸ்டர். இவரது மனைவி சில்வியா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் சில்வியா மீண்டும் கர்ப்பமானார். சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினார் சாண்டி. அதில், ரோபோ சங்கர், ரியோ ராஜ் உள்ளிட்ட விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சாண்டி குழந்தையின் பிஞ்சு கைகளின் வீடியோவுடன், எங்கள் ராஜா பிறந்து விட்டான் என பகிர்ந்துள்ளார்.
சாண்டி - சில்வியா தம்பதியருக்கு சூசன்னா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.