ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் |

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான தொடரும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 250 கோடி வரை வசூலித்தது. இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரின் கூட்டணி மீண்டும் மோகன்லாலின் 366வது படத்திற்காக இணைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் தற்போது இதன் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் தருண் மூர்த்தி.
பொதுவாகவே மோகன்லால் படங்கள் 50 முதல் 60 நாட்களுக்குள்ளேயே படப்பிடிப்பு நிறைந்து விடும். ஆனால் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பே 55 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதன் பிறகு தற்காலிகமாக படக்குழுவினருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள இயக்குனர் தருண் மூர்த்தி மீண்டும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் மே 5ம் தேதி துவங்க இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெறும் என சொல்லப்படுகிறது.