தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் | பிரபுதேவா, வடிவேலுவின் ‛பேங் பேங்' படப்பிடிப்பு நிறைவு | ஜூலை 3ல் ரிலீசாகிறது 'கட்டா குஸ்தி 2' | 4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர் | ‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் |

பான் இந்தியா படங்கள் பிரபலமான பின்பு, ஓடிடி தளங்கள் பிரபலமான பின்பு, நேரடிப் படங்கள், டப்பிங் படங்கள் என பாகுபாடு இல்லாமல் படங்களை ரசிக்க ஆரம்பித்துள்ளார்கள் சினிமா ரசிகர்கள். தெலுங்கு, மலையாளப் படங்கள் தான் தமிழில் அதிகமாக டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.
கடைசியாக 2025ல் வெளிவந்த 'காந்தாரா சாப்டர் 1' படம், அதற்கு முன்பு 2024ல் வெளிவந்த 'புஷ்பா 2' படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் குவித்தது. அதற்குப் பின் பல டப்பிங் படங்கள் வந்தாலும் அவற்றை ரசிகர்கள் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. அதில் சில படங்கள் அந்தந்த மொழிகளில் பெரிய வசூலைக் குவித்தாலும் இங்கு சுமாரான வசூலைக் கூடப் பெறுவதில்லை.
ஒவ்வொரு வாரமும் இங்கும் டப்பிங் படங்கள் வெளியாகின்றன. இந்த வாரம் தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டுள்ள 'பைக்கர்' படம் நேற்று வெளியாகியது. அடுத்த வாரம் மலையாளத்திலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டுள்ள 'பள்ளிச்சட்டம்பி' படம் வர உள்ளது.
தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்கு டப்பிங் ஆகி வெளியிடப்படும் படங்களுக்கு படக்குழுவினர் நிறையவே புரமோஷன் செய்கிறார்கள். ஆனால், மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் படங்களை படக்குழுவினரே கண்டுகொள்வதில்லை என படத்தை வாங்கி வெளியிடும் வினியோகஸ்தர்கள் குறையாகச் சொல்கிறார்கள்.