அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

பாலிவுட் நடிகையான சோனம் கபூர் பிரபல முன்னணி நடிகரான அனில் கபூரின் மகள். ஹிந்தியில் தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இவர் தான். 2018ல் ஆனந்த் அகுஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார் சோனம் கபூர். 2022ல் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. வாயு கபூர் அகுஜா என மகனுக்கு பெயரிட்டனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 29ம் தேதி இரண்டாவது முறையாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் சோனம் கபூர். இந்த நிலையில் தற்போது தனது குழந்தையை தான் அணைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சோனம் கபூர்.