தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நந்திதா நடிப்பில் வெளியான அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என வரிசையாக படங்கள் வெற்றி பெற்றதால் கவனிக்கப்படும் நாயகியாக மாறினார். சமீபகாலமாக நந்திதாவுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
இந்நிலையில் அபியும் நானும் என்ற சீரியலின் சிறப்பு ஒரு மணி நேர காட்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் நந்திதா ஸ்வேதா சிறப்புத் தோற்றத்தில் தோன்றுகிறார். இதற்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் சீரியலுக்கு வந்துவிட்டீர்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.