கமல் உடன் முத்தக்காட்சி பற்றி அபிராமி விளக்கம் | சிவனே உத்தரவிட்டு கண்ணப்பா படத்தை எடுத்ததாக உணர்கிறோம் : விஷ்ணு மஞ்சு | 10 வருட சிறந்த படங்களை அறிவித்த தெலுங்கானா அரசு | ராஜேஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி | 21 படம் நடித்தும் என்ன பலன்: விஷ்ணு விஷால் பீலிங் | கிஷன் தாஸின் புதிய படம் ஆரோமலே | பென்ஸ் படத்தில் இணைந்த சம்யுக்தா மேனன் | விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : ராதிகா ஆப்தே | மீண்டும் சிம்புவை இயக்குகிறாரா மணிரத்னம்? | தீபிகா படுகோனேவுக்கு எதிரான ரீல்ஸ்க்கு லைக் செய்தாரா தமன்னா : இன்ஸ்டா மீது புகார் |
நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடா என பல மொழிகளிலும் நடித்துள்ளார். ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ என்ற ரஷ்ய டென்னிஸ் வீரரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஸ்ரேயா சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், சில குறும்பான வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். இன்ஸ்டாவில் ஸ்ரேயாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரேயா சமீபத்தில் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்ரேயாவை அவரது கணவர் ஏமாற்றும் வீடியோ அது. சில கார்டுகளை உடைத்து போட்டு மீண்டும் அதனை இணைப்பது போன்ற மேஜிக் காட்சிகளை அவரது கணவர் செய்துக்காட்டி ஏமாற்றும் வீடியோ. இறுதியில் ஸ்ரேயா தனது அழகான சிரிப்புடன் ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறார். அவரது கணவரை முத்தமிடுவது போல் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.