ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
ஜெயம் ரவி அடுத்து இயக்குனர் கல்யாண கிருஷ்ணனுடன் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு பூலோகம் திரைப்படம் வெளியாகியது. தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இணைய உள்ளனர். ஜெயம் ரவியின் 28-வது படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் தாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
'யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன்', 'குட்டி' போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். தற்போது நான்காவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது. இப்படத்திற்கு தனுஷ்தான் கதை, திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதியுள்ளார் என கூறப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் டி44 படத்தின் படப்பிடிப்பை தொடங்க மித்ரன் ஜவஹர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஹன்சிகா தனுஷுடன் ஜோடியாக நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷுடன் மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார். அதேநேரம் நடிகை நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
வேகமாக வளரும் பிரியா பவானி சங்கர் ஜெயம் ரவி, தனுஷ் என 2 முன்னணி நடிகர்கள் படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.