சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடித்து வரும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது கோல்கட்டாவில் நடந்து வருகிறது. அதற்காக படத்தின் நாயகன் ரஜினிகாந்த் கோல்கட்டா சென்றுள்ளார்.
ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு ஐதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமானது. கொரோனா இரண்டாவது அலையின் போதும் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வந்தார்கள்.
அதன்பின் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். இங்கு சில நாள் ஓய்விற்குப் பிறகு மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவற்றை முடித்து விட்டு சென்னை திரும்பினார். இரண்டு நாட்களுக்கு முன்பு மன்ற நிர்வாகிகளை சந்தித்துப் பேசி, தனது அரசியல் பிரவேசத்தின் விட்ட குறை தொட்ட குறையையும் முடித்து வைத்தார். தனது ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.
அந்த சூட்டோடு படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார். திரும்பி வந்த பின் அவரது புதிய படங்களின் அறிவிப்பு வெளியாகும்.