ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் அஜித் குமார், ஹுமா குரேஷி மற்றும் பலர் நடிக்கும் படம் வலிமை. இப்படத்தின் அப்டேட் வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் கடந்த பல மாதங்களாகவே கேட்டு வந்தனர் ஆனால் படக்குழுவினர் அது பற்றி எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதி காத்து வந்தனர்
அஜித் பிறந்த நாளான மே 1-ஆம் தேதியன்று வலிமை அப்டேட் வந்திருக்க வேண்டியது. ஆனால் கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் எப்போது அப்டேட் வரும் என அஜித் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கேட்டுக்கொண்டே இருந்தனர். அதற்கு அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான பதிலையும் வலிமை படக்குழு அறிவிக்கவில்லை
இந்நிலையில் நேற்று எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி மாலை திடீரென வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை வலிமை படத்தின் முதல்பார்வை போஸ்டர் களையும் வெளியிட்டனர். முன்னறிவுப்பு இல்லை என்றாலும் வலிமை அப்டேட் வந்தது என்ற மகிழ்ச்சியில் நேற்று வலிமை அப்டேட் பற்றிய முதல் பார்வை போஸ்டர்கள் மோஷன் போஸ்டர் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் அதிகமாக லைக் செய்து அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் யுடியூப்பில் 24 மணிநேரம் கடந்து தொடர்ந்து டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது வலிமை மோஷன் போஸ்டர். வலிமை படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது