தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புது நிர்வாகிகள் : பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா? | எந்த சத்தமும் இல்லாத 'ஜனநாயகன்' | பாலிவுட்டில் கால் பதிக்கும் அனுபமா | மித மிஞ்சிய உழைப்பில் உருவான படம் : விஜய் மில்டன் | 'சாரக்' படத்திற்கு தணிக்கை சான்று மறுப்பு | ஏ படத்திற்கு 45 இடத்தில் கட் | பிளாஷ்பேக் : கழுகு நடித்த படம் | பிளாஷ்பேக் : திருடனாக நடித்த ஜெமினி கணேசன் | உதய்ப்பூர் சென்றடைந்த திருமண ஜோடி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | கணவன், மனைவி மோதிக் கொள்ளும் பிப்ரவரி 27 வெளியீடுகள் |

சேர்ந்தே இருப்பது என்று வனிதா விஜயகுமாரையும் சர்ச்சைகளையும் சொல்லலாம். சமீபத்திய சர்ச்சை பிக்பாஸ் ஜோடிகள் என்ற டிவி நிகழ்ச்சியில் இருந்து பாதியில் விலகி புகார் சொன்னது. இதுகுறித்து வனிதா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, அந்த டிவிக்கும் எனக்கும் எந்த ஒரு பிரச்சினையுமே இல்லை. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அவர்கள் கூறிய விஷயங்களில் சில எனக்குப் பிடிக்கவில்லை.
அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அனைவருமே ஸ்டார்களாகத் தான் உள்ளே சென்றோம். அனைவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் தான். அதற்குரிய மரியாதை அனைவருக்குமே கொடுத்து தான் ஆக வேண்டும். அது கொஞ்சம் தளர்வானதில் எனக்கு ஈடுபாடு இல்லை. அதனால் தான் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டேன்.
மாதர் சங்கம் எந்தப் பெண்ணிற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் பார்த்துள்ளேன், நிறைய போராடியுள்ளேன். எந்தவொரு மாதர் சங்கமும் எனக்கு உதவி செய்யவில்லை. தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் விளம்பரத்துக்காக ஆதரிக்கிறார்கள். சமூக வலைதளத்தில் நிறையத் தவறுகள் நடக்கிறது என்பது உண்மை தான். தனிப்பட்ட விஷயங்களில் தான் தவறாகப் பேசுகிறார்கள். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு நின்றால், யார் உன் கணவர் என்று கேட்கிறார்கள்'.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.