தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

கொரோனாவால் கடந்த சில மாதங்களாக சினிமாவில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போரடிக்காமல் இருக்க நட்சத்திரங்கள் சமூகவலைதளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர்.
தமிழ் சினிமா ரசிகர்களிடம் சுல்தான் படத்தின் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இவர் ஏற்கனவே தெலுங்கு படங்களின் மூலம் பிரபலமானார். அதுவும் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு தாண்டி தமிழ் ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமடைந்து ஒரு கட்டத்திற்கு பிறகு ராஷ்மிகா எப்போது தமிழ் சினிமாவில் நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இவரது நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் ராஷ்மிகா நடிப்பை கொண்டாடினர்.
இந்நிலையில் ராஷ்மிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீர்கள் என்று கேட்டார். அந்த கேள்விக்கு கூலாக பதில் அளித்திருக்கிறார். ரஷ்மிகா கூறியிருப்பதாவது, நான் சிகரெட் பிடித்தது இல்லை. சிகரெட் பிடிப்பவர்கள் பக்கமே செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.