மீண்டும் இணைந்த ‛ரவுடி பேபி' கூட்டணி | மமிதா பைஜூக்கு போட்டியா அனஸ்வரா ராஜன் | நம்பிக்கையுடன் காத்திருக்கும் நயன்தாரா | அர்ஜுன், ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | புருஷன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | கென் கருணாஸின் யூத் மார்ச் மாதத்தில் திரைக்கு வருகிறது | 2026 ஜனவரியில் 22 படங்கள் ரிலீஸ் : 20 கோடி கூட லாபம் இல்லையா? | பாவனாவின் 'அனோமி: தி ஈக்வேஷன் ஆப் டெத்' பிப்ரவரி 6ல் ரிலீஸ் | பிரதீப் ரங்கநாதன் ஆக நினைக்கிறாரா அபிஷன் ஜீவிந்த் | 'ஜனநாயகன்' நிலை, இந்த வாரம் தெரிந்துவிடுமா? |

வினோத் இயக்கத்தில், அஜித் நாயகனாக நடித்து வரும் படம் 'வலிமை'. இப்படத்தின் முதல் பார்வை அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதியன்று வந்திருக்க வேண்டியது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் படக்குழுவினர் அதை தள்ளி வைத்தனர்.
அதற்குப் பிறகு பல சந்தர்ப்பங்களில் 'வலிமை அப்டேட்' வேண்டும் என அஜித் ரசிகர்கள் அடிக்கடி குரலெழுப்பி வந்தனர். சமூக வலைத்தளங்களில் இந்த வார்த்தை இடம் பெறாத நாளே இல்லை என்றும் ஆகியது.
இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் ஜுலை 15ம் தேதியன்று வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஏற்கெனவே, படத்தின் முதல் பார்வை, மோஷன் போஸ்டர் ஆகியவை தயாராக உள்ளதாகவும் செய்தி பரவியது.
'வலிமை' படத்தைப் பார்க்க நாங்கள் ஆவலாக உள்ளோம் என்பதை அஜித் ரசிகர்கள் பல்வேறு தளங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதத்தில் ஜுலை 15ம் தேதியன்று 'வலிமை அப்டேட்' வெளியாகுமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.