டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 50 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தினால் மொத்த படப்பிடிப்பும் முடிவடையும் நிலையில் உள்ளது என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே, இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிந்தைய சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை ஆகியவை சாதனை விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பாலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள தெரிவிக்கின்றன. அனைத்து மொழிகளுக்குமான அந்த உரிமையை ஜீ நிறுவனம் சுமார் 325 கோடி ரூபாய்க்கு வாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். கடந்த வருடம் ஸ்டார் இந்தியா நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடந்ததாம். ஆனால், அவர்களுடனான பேச்சு வார்த்தை ஒப்பந்தம் வரை போகவில்லை என்கிறார்கள்.
இந்த சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை விற்பனையுடன் சேர்த்து அனைத்து விதமான வியாபாரத்தையும் 'ஆர்ஆர்ஆர்' குழுவினர் முடித்துவிட்டார்களாம். டேபிள் பிராபிட்டாக மட்டும் சுமார் 400 கோடிக்கும் அதிகமாக வந்திருக்கும் என்கிறார்கள். ஒட்டு மொத்த வியாபாரமும் 800 கோடி ரூபாயைக் கடந்திருக்கலாம் என்றும் தகவல்.
இந்தியத் திரையுலகில் இதுவரையில் எந்த ஒரு படமும் வெளியீட்டிற்கு முன்பே இந்த அளவிற்கு ஒரு வியாபாரத்தைப் பண்ணதில்லை என்றே பாலிவுட்டில் சொல்கிறார்கள்.
ராஜமவுலி இந்தியத் திரையுலகின் முதன்மை இயக்குனராக இப்படம் மூலம் உயர்ந்துவிடுவார் என்பதால் தெலுங்குத் திரையுலகினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.




