இயக்குனரின் கெட்ட பெயர் தான் ஓடிடி ரிலீஸை தடுக்கிறது : டொவினோ தாமஸ் பதிலடி | சல்மான்கான் மன்னிப்பு கேட்டால் பரிசீலனை செய்ய தயார் : பிஸ்னாய் சமூகம் அறிவிப்பு | கமல் பட வாய்ப்பை மறுத்தாரா பிரேமலு பட இயக்குனர்? | இன்ஸ்பெக்டர் ரிஷியை பாராட்டிய ரஜினி : ஜே.எஸ் நந்தினி நெகிழ்ச்சி | விஜயகாந்த் மகனின் உருக்கமான ஆசை | கர்ப்பிணி பெண்களின் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட அமலாபால் | மம்முட்டியை இயக்கும் கவுதம் மேனன் | சிவகார்த்திகேயனை இயக்க தயாராகும் சிபி சக்ரவர்த்தி | எனக்கு பிடித்த இடம் : நயன்தாரா | 'கூலி' படப்பிடிப்புக்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு ? |
ஹிந்தியில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஆர்ட்டிக்கிள் 15' படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க 'கனா' படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்து வருகிறார். படத்தில் உள்ள மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதியரின் மகளான ஷிவானி ராஜசேகர் நடிக்க உள்ளாராம். இவர் ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக நடிக்கும் 'அன்பறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
ஷிவானியின் சகோதரியான ஷிவாத்மிகா, கவுதம் கார்த்திக், சேரன் நடிக்கும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அக்கா தங்கை இருவருமே ஒரே சமயத்தில் தமிழில் அறிமுகமாக உள்ளார்கள்.
'ஆர்ட்டிக்கிள் 15' படத்துடன் மகிழ் திருமேனி இயக்கும் ஒரு படத்திலும் உதயநிதி நடித்து வருகிறார்.