'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு |

மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, கார்த்திகா மற்றும் பலர் நடித்த 'கோ' படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், டாப்சி மற்றும் பலர் நடித்த 'ஆடுகளம்' படமும் தமிழ் சினிமாவில் குறிப்பிட வேண்டிய படங்கள்.
'கோ' படம் ஒரு சிறந்த அரசியல் படமாகவும், 'ஆடுகளம்' படம் மதுரை மண்ணின் களத்தை இயல்பாகக் காட்டிய படமாகவும் ரசிகர்களைக் கவர்ந்தது.
'கோ' படத்தில் முதலில் ஜீவாவிற்குப் பதிலாக சிம்பு தான் நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டபின் சில காரணங்களுக்காக அப்படத்தை விட்டு அவர் விலகினார். அதன் பின்பு தான் அக்கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அது போலவே, 'ஆடுகளம்' படத்தில் டாப்சி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் த்ரிஷா தான் சில நாட்கள் நடித்தார். பின்னர் அவருக்குப் பதிலாக டாப்சி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
சிம்பு, த்ரிஷா ஆகியோர் அந்தப் படங்களில் நடித்த சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாகப் பரவி வருகிறது. பலரும் அந்தப் புகைப்டங்களைப் பகிர்ந்து தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.