இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

உலகம் முழுவதும் வசூலை குவித்த ப்ளாக் பேந்தர் படத்தில் நடித்து பிரபலமானவர் சாட்விக் போஸ்மேன். 2016ம் ஆண்டு வெளியான 'கேப்டன் அமெரிக்கா : சிவில் வார்' படத்தில் ப்ளாக் பேந்தராக சிறிய கேரக்டரில் நடித்தார். அந்த கேரக்டருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தால் அதையே மெயின் கேரக்டராக மாற்றி தயாரான படம் தான் பிளாக் பேந்தர்.
அடுத்து அவர் குத்துச் சண்டை வீரர் மைக் டைசனின் வாழ்க்கை வரலாற்று படத்திலும், பிளாக் பேந்தர் 2ம் பாகத்திலும் நடிக்க தயாராகி வந்தார். இந்த நிலையில் போஸ்மேனுக்கு குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதை மறைத்து சினிமாவில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி காலமானார்.
போஸ்மேன் மறைந்து விட்ட நிலையில் கடந்த ஆண்டு அவர் நடித்து ஓடிடி தளத்தில் வெளியான 'ப்ளாக் பாட்டம்' என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது. இறந்த பிறகு இந்த விருதை பெறும் முதல் நடிகர் போஸ்மேன்.