
யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம் - அசத்தும் காடன் டிரைலர்
இந்நிலையில் இன்று(மார்ச் 3) காடன் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், யானைகள் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் காட்டுப்பகுதியை அழித்து அதை நகரமாக்கும் முயற்சியில் அமைச்சர் ஒருவர் இறங்குகிறார். அவரை தடுத்து நிறுத்த கடுமையாக போராடுகிறார் ராணா. இப்படியொரு கதைக்களத்தில் தான் காடன் படம் உருவாகியிருப்பதை அந்த டிரைலரில் புரிந்து கொள்ள முடிகிறது.
அதோடு, ""யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்"" என ஒரு வசனமும் இடம் பெற்றுள்ளது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்த டிரைலர் இப்போதே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாந்தனு மொயித்ரா இசையமைக்க, அசோக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!