மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! | வித்யாசாகர் மகனை ஹீரோவாக மாற்றும் எஸ்.ஆர். பிரபு! | 'ராமாயணா' படத்தில் யஷ்ஷிற்கு தம்பியாக விஜய் சேதுபதி! | மீண்டும் கிராமத்து கதைக்கு திரும்பும் சிவகார்த்திகேயன்! | துல்கர்சல்மான் வெளியிட்டு வாழ்த்திய இலங்கை தமிழ்ப்படம் | கார் ரேஸில் அஜித்தை உற்சாகப்படுத்தும் நட்சத்திரங்கள்: பின்னணியில் இப்படி ஒரு விஷயமா? |

தெலுங்கு சினிமாவில் இளைஞர்கள் ஆதிக்கம் அதிகமாகி வந்தாலும் சீனியர்களும் களத்தில் டப் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் தொண்ணூறுகளில் போட்டி போட்டு தங்கள் படத்தை ரிலீஸ் செய்து வந்த நடிகர்கள் சிரஞ்சீவியும், வெங்கடேஷும் மீண்டும் ஒரேசமயத்தில் களத்தில் மோத இருக்கின்றனர். ஆம்.. சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படம் மே-13 ஆம் தேதியும், வெங்கடேஷ் நடித்துள்ள நரப்பா மே-14ஆம் தேதியும் என ஒருநாள் இடைவெளியில் ரிலீஸாக இருக்கின்றன. இந்த போட்டி இருவரது ரசிகர்களையும் ரொம்பவே உற்சாகப்படுத்தியுள்ளது.
இதில் ஆச்சார்யா படத்தை கொரட்டாலா சிவா இயக்கியுள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம்சரணும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். வெங்கடேஷின் நரப்பா படம் தமிழில் தனுஷ் நடிப்பில் வெற்றி பெற்ற அசுரன் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. பிரியாமணி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை ஸ்ரீகாந்த் அத்தலா இயக்கியுள்ளார்.




