சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
'பைரவா', 'சர்க்கார்' உள்ளிட்ட படங்களில் நடிகர் விஜய்யுடன் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், குறுகிய காலத்தில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். அவர் நடித்தப் படங்கள் அனைத்தும் வசூலிலும் சாதனை படைத்ததால், அவருக்கு தொடர்ச்ச்சியாக பட வாய்ப்புகள் வருகின்றன.
இந்நிலையில், புத்தாண்டில் ஒளிபரப்புவதற்காக தனியார் தொலைகாட்சி ஒன்று நடிகைகள் சரோஜா தேவி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரை அழைத்து, நிகழ்ச்சி ஒன்றை நடத்தி அதை படம் பிடித்தது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சில படங்களை வரிசையாக வைத்து அதில் யாரைப் பிடிக்கும்? இதில் இருப்பவர்களின் யார் மாதிரி உங்கள் கணவர் இருக்க வேண்டும் என்றெல்லாம் கீர்த்தி சுரேஷிடம் கேள்வி எழுப்பினர். நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிவ கார்த்திகேயன், விக்ரம் உள்ளிட்டோர் படங்கள் இடம் பெற்று இருந்தன.
இப்படியொரு கேள்விக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவார் என்ற எண்ணத்தில்தான், இப்படியொரு கேள்வி கேட்கப்பட்டது. ஆனால், கொஞ்சமும் தயங்காத கீர்த்தி, 'இதில் இடம் பெற்றிருக்கும் எல்லோரையுமே எனக்குப் பிடிக்கும். அதே நேரம், எனக்கு கணவராக வர வேண்டியவர் எப்படி இருக்க வேண்டும் என்றால், நடிகர்கள் விஜய் மற்றும் விக்ரம் போல இருக்க வேண்டும்' என பளிச்சென்று பதில் சொல்லி விட்டார். இதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திகைத்து விட்டதாக தகவல்.