ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லட்சுமி, வட சென்னை படங்களை அடுத்து, கனா படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து, நம்மிடையே பேசியதிலிருந்து:
கனா பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?
ஒரு நாள், சிவகார்த்திகேயன் என்னிடம் வந்து, 'கிரிக்கெட் ஆடத்தெரியுமா?' எனக் கேட்டார். 'தெரியாது' என்றேன். கனா படத்தில் நடிக்க தான், அவர் அப்படி கேட்டார் என்பது, பின் தெரிந்தது. எனக்கு தெரிந்த நடிகையரிடம், இதுகுறித்து சொன்னேன். இந்நிலையில், 'நானே நடிக்கிறேன்' என்றேன். 'ஒரு வாரம் பயிற்சி எடுக்கிறேன். தேறினால் வாய்ப்பு தாருங்கள்' என்றேன். 65 நாள் பயிற்சி எடுத்து, ஆறு மாதம் கால்ஷீட் கொடுத்தேன். அந்த ஆறு மாதம், மறக்க முடியாத நாட்கள்.
பயிற்சியின் போது அடிப்பட்டது என்றனரே?
ஆம், முதுகில் வலி அதிகமானது. ஒரு மாதம் வீட்டிலேயே படுத்து விட்டேன். படப்பிடிப்பின் போது நடிக்க முடியவில்லை. அதனால், கிரிக்கெட் அல்லாத மற்ற காட்சிகளை முதலில் எடுத்தனர். தினமும் பயிற்சி எடுத்த பின், வலி சரியானது. படப்பிடிப்பில் பல முறை அடிபட்டது.
உங்களின் தற்போதைய எதிர்பார்ப்பு?
காக்கா முட்டை, வடசென்னை, கனா என நல்ல படங்கள் அமைகின்றன. எனக்கு தேசிய விருது கிடைக்கிறதோ இல்லையோ, கனா படத்திற்கு விருது கிடைக்க வேண்டும். காக்காமுட்டைக்கு மற்றவர்களுக்கு விருது கிடைத்தது. துணை நடிகை பிரிவில் சென்றிருந்தால், எனக்கு விருது கிடைத்திருக்கலாம். காக்கா முட்டை படத்திற்காக கூவம் அருகிலேயே, அங்குள்ள மக்களுடன் தங்கியிருந்தது மறக்க முடியாதது. அவர்களுடன் பழகியதே பெரிய விருது.
கனா படத்தின் உங்கள் கேரக்டர் எப்படி?
விவசாயி மகளாக நடித்துள்ளேன். எனக்கு, 10 வயதிருக்கும் போதே, என் தந்தை இறந்துவிட்டார். படத்தில் எனக்கு தந்தையாக நடித்த சத்யராஜுக்கும், எனக்கும், படப்பிடிப்பு முடிந்தும், தந்தை, மகள் பாசம் தொடர்கிறது. கனா பட போஸ்டர், டிரெய்லரை பார்த்து விட்டு, தனுஷ், விஜய் சேதுபதி பாராட்டினர். படம் நிச்சயம், 'சிக்ஸர்' அடிக்கும் என, விஜய்சேதுபதி பாராட்டினார். அவர், நாயகிக்கான முக்கியத்துவமுள்ள கதைகளை எனக்கு அனுப்பி வைக்கிறார்.
பலத்த போட்டிக்கு இடையே படம் வெளியாவது குறித்து?
ஆமாம், ஐந்து படங்கள் இன்று வெளியாகின்றன. அனைத்து படங்களும் வெற்றிப் பெற வேண்டும். அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் படம் சீனாவில், பெரிய வெற்றி பெற்றது போல், கனா படமும், சீனாவில் வெற்றி பெற வேண்டும். என்பது என் ஆசை.