ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்து, 2012ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் இரண்டாவது படமாக ஆரம்பமான படம் 'ஒரு பக்கக் கதை'. 2014ம் ஆண்டு கமல்ஹாசன் துவக்கி வைத்த படம் இது. மலையாளம், மற்றும் தமிழில் பல படங்களில் நடித்த ஜெயராம் மகன் காளிதாஸ் இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்த முதல் படமும் இதுதான்.
படம் முடிந்து பல மாதங்களாகியும் பல்வேறு பிரச்சினைகளால் படம் வெளியாவது தள்ளிப் போனது. சில வாரங்களுக்கு முன்புதான் இப்படத்தின் சென்சார் முடிவடைந்தது. தியேட்டரில் விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜீ 5 என்ற ஆன்லைன் ஆப்பில் இப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தியேட்டரில் படத்தை வெளியிடாமல் நேரடியாக ஆப்பில் வெளியிட அதிகத் தொகை கொடுத்து படத்தை வாங்கியுள்ளளார்களாம். இப்படத்துடன் 'பரியேறும் பெருமாள்' பட நாயகன் கதிர் நாயகனாக நடித்து சில திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு வரவேற்பைப் பெற்ற 'சிகை' படமும் தியேட்டர்களில் வெளியாகாமல் ஜீ 5 ஆப்பில் வெளியாக உள்ளதாம்.
இது தமிழ் சினிமாவிற்கு நல்லதா, இல்லை தியேட்டர்களுக்கு சிக்கலா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.